Feedburner என்றால் என்ன அது எதற்குப் பயன்படுகிறது ?

பீட்பர்னர் என்றால் என்ன? 

பீட்பர்னர் (Feedburner) என்பது வலைப்பூ அல்லது வலைத்தளத்தை வாசகர்கள் RSS , E-mail மூலம் தொடர பயன்படுவது.
பீட்பர்னரானது உங்களுடைய வலைப்பூவின் பதிவுகளை வாசகர்களின் மின்னஞ்சலுக்கோ அல்லது RSS ரீடருக்கோ அனுப்பி வைக்கும்.

பீட்பர்னரின் பயன் (Use of Feedburner): 

பீட்பர்னரில் உள்ள Email Subscription விட்ஜெட் கோடிங் எடுத்து உங்களது தளத்தில் பயன்படுத்துவதன் மூலம், உங்களது தளத்திற்கு வருகை தரும் புதிய வாசகர்கள், அவர்களது மின்னஞ்சலைப் பதிந்து, Email Subscribe செய்துகொள்ளலாம்.
இதன் மூலம் உங்களுடைய வலைப்பூவின் புதிய  பதிவுகள் அனைத்தினையும் அவர்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது RSS மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பீட்பர்னர் கணக்குத் தொடங்குவது எப்படி? (Feedburner account)

Feed burner -கணக்குத் தொடங்க உங்களுக்கு நிலையான ஜி-மெயில் முகவரி இருந்தாலே போதும். நீங்கள் ஒரு ஜிமெயில் பயனர் என்றால் உங்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி பீட்பர்னர் தளத்தில் உள்நுழையலாம். இல்லையெனில் புதிய மின்னஞ்சல் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும்(sign up).
ஃபீட்பர்னர் தளத்திற்கு செல்ல முகவரி: FeedBurner

பீட்பர்னர் கணக்கு உருவாக்கும் முறை: 

பீட்பர்னர் தளத்தில் உங்கள் G-mail முகவரி கொடுத்து உள்நுழைந்து(login) செய்து கொள்ளவும். லாகின் செய்தவுடன், உங்களுக்கு இவ்வாறான ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்கள் வலைப்பூவின் முகவரியைத் தரவும்.
அதாவது  http://udhayammalar.blogspot.com என உங்கள் பிளாக் முகவரியைத் தரவும். இங்கு udhayammalar என்பதற்குப் பதில் உங்களுடைய பிளாக் முகவரியைத் தரவும்.
உதாரணத்திற்கு கீழுள்ள பெட்டியில் http://udhayammalar.blogspot.com  என உள்ளிட்டிருக்கிறேன் . கீழிருக்கும் படமானது என்னுடைய UDHAYAMMALAR தளத்திற்கு ஃபீட்பர்னர் கணக்கைத் துவங்கும்போது எடுத்த Screen Shot.



அடுத்த பக்கத்தில் வரும் இரண்டு Feed URL-களில் ஏதேனும் ஒன்றை மட்டும் செலக்ட் செய்யுங்கள். படத்தில் ரேடியோ பட்டன் செலக்ட் செய்திருப்பதை கவனியுங்கள். தெளிவாக படத்தைப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

4. அடுத்து உங்கள் Feed-க்கு Title மற்றும் முகவரி தர வேண்டும். இதில் Feed Address மிகவும் முக்கியமானது. இதை கொடுப்பதற்கு முன்பு யோசித்து நிரந்தரமாக இருக்கும்படியான பெயரினைக் கொடுக்க வேண்டும். (கீழுள்ள படத்தினைப் பார்க்கவும்.)
இப்படி கொடுத்த பிறகு, மீண்டும் தேவைப்படும்போது பீட் அட்ரசில் உள்ள பெயரை மாற்ற நினைக்கலாம். அவ்வாறு மாற்றும்போது இதற்கு முன் உள்ள பீட் அட்ரசில் தொடர்ந்த நண்பர்கள் அனைவரையும் நீங்கள் இழக்க நேரிடும்.
எனவே இதில் கவனமுடன் செயல்பட்டு, நிரந்தரமாக ஒரே அட்ரஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக சொல்வதென்றால் பீட் அட்ரசில்  முதல் முறை கொடுத்ததை மாற்றக்கூடாது. நான் udhayammalar என கொடுத்துள்ளேன். பீட்அட்ரஸ் பெயரானது சுருக்கமாக ஒரே வார்த்தையாக இருந்தாலே போதுமானது. நீளமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய வலைத்தளத்தின் பெயரையே பீட் அட்ரசாக கொடுக்கலாம்.

5. அவ்வளவுதான் இப்போது உங்கள் Feed தயாராகிவிட்டது. மேலும் உங்கள் பீட்பர்னரில்  ஒரு சில வசதிகளை ஆக்டிவேட்செய்ய Next கொடுக்கவும்.
6. அடுத்து வரும் பக்கத்தில் 1. Click throughs, 2. I want more! Have FeedBurner Stats also track என்பவைகளை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் Feedburner கணக்கு பயன்படுத்த தயாராகிவிடும்.

ஃபீட்பர்னர் தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை:

  • Optimize என்பதில் கிளிக் செய்து Feedflare கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமானவற்றை டிக் செய்துகொள்ளவும். தேவையில்லையெனில் அப்படியே விட்டுவிடலாம்.
  • Publicize என்ற டேபைக் கிளிக் செய்யவும். அதிலுள்ள 
  • 1. Email Subscriptions என்பதைக் கிளிக் செய்து Activate என்பதைக் கிளிக் செய்யவும். 
  • 2. Pingshot, 3. Feedcount,4. Creative Commons போன்றவற்றையும் ஒவ்வொன்றாக கிளிக் செய்து Activate செய்துகொள்ளுங்கள்.
  • Email Subscriptions பகுதியில் உள்ள கோடிங்கை காப்பி செய்து புதிய Gadget ஆக உங்கள் வலைப்பூவில் சேர்க்கவும். அதாவது அங்கு தோன்றும் நிரல்வரிகளை உங்கள் பிளாக்கரில் Add gadget==>Html/Javasctript சென்று Paste செய்து சேமித்துக்ககொள்ளுங்கள். அந்த விட்ஜெட்டிற்கு தலைப்பு இமெயில் மூலம் பதிவுகளைப்பெற என தலைப்பிonqkf.
    இது மின்னஞ்சல் மூலம் உங்கள் வலைத்தளத்தை தொடர விரும்பும் (Email Subscriptions ) நண்பர்களுக்கு பயன்படும். 

பிளாக்கரில் செய்ய வேண்டியது (Blogger Settings)  

  • இப்போது பிளாக்கர் கணக்கில் Settings சென்று others கிளிக் செய்யுங்கள். முதலில் உள்ள Allow Blog Feed என்பதில் Short அல்லது until jump break என்று கொடுக்கவும். இப்படி கொடுப்பதால் மின்னஞ்சல் அல்லது RSS Feed மூலம் உங்கள் பதிவுகளை வாசிப்பவர்களுக்கு பதிவின் ஆரம்ப பகுதி மட்டுமே சென்றடையும். 
  • முழுப் பதிவையும் படிக்க வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வந்துதான் படிக்க முடியும். அதனால் உங்களுடைய தளத்தில் Page views அதிகரிக்கும்.
  • அடுத்துள்ள Post Feed Redirect URL என்பதில் http://feeds.feedburner.com/UdhayamMalar எனக் கொடுக்கவும். UdhayamMalar என்பதற்கு பதிலாக உங்களுடைய வலைத்தளத்தின் Feed Address இருக்க வேண்டும்.

முடிவு: 

இவ்வாறு நீங்கள் உருவாக்கிய பீட்பர்னர் கணக்கின் இமெயில் சப்ஸ்கிரிப்சன் மூலம் தளத்திற்கு வரும் வாசகர்கள் உங்கள் தளத்தைத் தொடர முடியும். தொடர முடியும் என்பதற்கு பொருள், உங்களுடைய வலைப்பூவின் பதிவுகள் அவர்களுக்குச் செல்வதால், அவர்கள் தொடர்ச்சியாக உங்கள் தளத்திற்கு வந்து படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.
இனி ஒவ்வொரு முறையும் புதிய பதிவுகளை நீங்கள் வெளியிடும்பொழுதும் உங்கள் பதிவுகளானது பீட்பர்னர் வசதியின் மூலம் உங்கள் தளத்தை தொடரும் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் வழியே சென்றுவிடும். நன்றி நண்பர்களே..!
(இது ஒரு திருத்தப்பட்ட மீள் பதிவு)
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை