Paytm மூலம் ரூ.60,000 வரை கடன் பெறுவது எப்படி? இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!

Paytm மூலம் ரூ.60,000 வரை கடன் பெறுவது எப்படி?  இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!

பேடிஎம் (Paytm) - இந்தியாவில் மிகவும் பரவலான முறையில் பயன்படுத்தப்படும் மற்றும் மிகவும் பிரபலமான ஒரு பேமண்ட் சேவைகளில் ஒன்றாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு பேடிஎம் வேலட் ஆக தொடங்கி, தற்போது பேடிஎம் நிறுவனமானது யூபிஐ வழியிலான பணப்பரிவர்த்தனைகளை நிகழ்த்தவும், பில்களை செலுத்தவும் மற்றும் சிறிய அளவிலான கடன்களை பெறவும் உதவுகிறது.

ஆம், கடந்த 2019 ஆம் ஆண்டில் பேடிஎம் நிறுவனம் அதன் கடன் வழங்கும் சேவையை பேடிஎம் போஸ்ட்பெய்ட் (Paytm Postpaid) என்கிற பெயரின் கீழ் அறிவித்தது.

இந்த சேவையானது பேடிஎம் போஸ்ட்பெய்ட் (Paytm PostPaid) மற்றும் பேடிஎம் போஸ்ட்பெயிட் மினி (Paytm PostPaid Mini) என்கிற இரண்டு பிரிவுகளின் கீழ் அணுக கிடைக்கிறது மற்றும் "இப்போதே வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்" என்கிற ஃபார்முலாவின் கீழ் இது வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.


இந்த பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவையானது சிறிய அளவிலான உடனடி கடன்களை மட்டுமே வழங்குகிறது. அதாவது இது, பயனர்கள் தங்கள் சிறிய அளவிலான வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க அல்லது சிறிய அளவிலான ஷாப்பிங்கை செய்ய உதவுகிறது.பேடிஎம் நிறுவனத்தின் இந்த கடன் வழங்கும் சேவையானது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் இணைந்து தொடங்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவையின் கீழ் எவ்வளவு பணம் வரை கடனாக பெற முடியும்?

பேடிஎம் போஸ்ட்பெய்டு மினி வழியாக பயனர்கள் ரூ.250 முதல் ரூ.1000 வரையிலான தொகையை கடனாக பெற முடியும். ரூ.1000 என்கிற தொகையெல்லாம் போதாது, சற்றே பெரிய அளவிலான தொகையை கடனாக பெற விரும்பும் பயனர்கள் பேடிஎம் போஸ்ட்பெய்டைத் தேர்வுசெய்யலாம்.. இதன் கீழ் நீங்கள் ரூ.60,000 வரை இன்ஸ்டன்ட் கிரெடிட்டை பெறலாம்.

பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவையின் கடன் விதிமுறைகள், வட்டி விவரங்கள் என்னென்ன?

பேடிஎம் நிறுவனத்தின் கூற்றுப்படி, பொதுவாக அதன் போஸ்ட்பெய்ட் சேவையானது 0% வட்டியில் கடன்களை திருப்பிச் செலுத்த பயனர்களுக்கு 30 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கும்.

இந்த சேவையின் கீழ் சிறிய அளவிலான கட்டணம் செலுத்த (convenience fee) வேண்டியிருக்கும். ஆனால் பேடிஎம் நிறுவனம் இந்த கடன் சேவையின் கீழ் எந்த வகையான வருடாந்திர கட்டணங்களையும், ஆக்டிவேஷன் கட்டணங்களையும் வசூலிக்காது.

பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி?

01: பேடிஎம் ஆப்பிற்குள் லாக்-இன் செய்து, ஹோம் ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் உள்ள சேர்ச் ஐகானைக் கிளிக் செய்து, அங்கே பேடிஎம் போஸ்ட்பெய்ட் (Paytm Postpaid) என டைப் செய்யவும்.

02: பின்னர், மை பேடிஎம் போஸ்ட்பெய் (My Paytm Postpaid) என்கிற ஐகானைத் தேர்வு செய்யவும். பின்னர் ஆன்போர்டிங் செயல்முறையை தொடங்க உங்களின் அடிப்படை விவரங்களை (பான் கார்டு விவரங்கள், பிறந்த தேதி) உள்ளிடவும்.

03: ஆக்டிவேஷனின் போது, ஒட்டுமொத்த டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையும் சில நிமிடங்களில் முடித்து விடலாம். ஏனெனில் இங்கே பயனர்கள் தங்களது ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டி இருக்காது.

04: கடைசியாக, இறுதி கடன் சலுகையை (லோன் ஆபர்) மதிப்பாய்வு செய்து, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும். இப்போது உங்களுக்கான பேடிஎம் போஸ்ட்பெய்ட் சேவையானது உடனடியாக ஆக்டிவேட் செய்யப்பட்டு, அக்கவுண்ட்ஸ் (Accounts) பிரிவின் கீழ் உங்களுக்கான கடன் வரம்பு (கிரெடிட் லிமிட்) காட்சிப்படுத்தப்படுவதை நீங்கள் பார்க்கலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை