ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண் பதிவு செய்வது எப்படி?



தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் அவரவர் ஆதார் எண்களை இணைத்து வந்தனர்.

இந்நிலையில், குடும்ப அட்டையில் மொபைல் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணைத்தால் மட்டுமே அவர்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் ரேஷன் கடைகளில் உள்ள இருப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ள குறுஞ்செய்தி வசதியை பெற முடியும்.
ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை எப்படி பதிவு செய்வது?
மொபைல் எண்ணை பதிவு செய்ய மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.
அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எடுத்துக்காட்டாக 005/sh/ 33657778 என்ற எண்ணை கூறவும்.
பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.
இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்..
இதேபோல், ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் எண்ணை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வராது.
போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ. அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும். அதற்குப் பின்புதான் ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படும்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை