TAHDCO Loan Scheme Details in Tamil: தாட்கோ ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு, பல்வேறு திட்டங்களின்கீழ் லட்சக்கணக்கில் நிதியுதவியை வழங்கி வருகிறது.
தாட்கோ என்றால் என்ன?
தாட்கோ (TAHDCO - Tamil Tamilnadu Adi Dravidar Housing Development Corporation) என்பது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கம் ஆகும்.
தாட்கோ மூலம் யாருக்கு, என்ன உதவி வழங்கப்படுகிறது?
பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த, தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகங்களை அமைத்து, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதன்முதலாக கடந்த 1976-ம் ஆண்டு தாட்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்து மாவட்ட வாரியாக தாட்கோ செயல்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், வங்கிக் கடன் உதவியுடன் வழங்கப்படுகின்றன.