திருப்பப்பட்ட சான்றிதழை(Return Application) மறுபடியும் சமர்ப்பிப்பது(Resubmit) எப்படி? Send back to Kiosk/Citizen

 இந்த பதிவில் திருப்பப்பட்ட சான்றிதழை(Return Application) மறுபடியும் சமர்ப்பிப்பது(Resubmit)  எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.

உங்கள் சான்றிதழ் திருப்பப்பட்டுள்ளதா(Return Application) என்பதை பார்ப்பது எப்படி?

tnedistrict.tn.gov.in/tneda/ என்ற இணையதளத்தில் முதலில் செல்லவும். பிறகு வலது புறம் மேலே Acknowledgement No என்று இருக்கும் அங்கு உங்கள் விண்ணப்பத்தின் எண்ணை(Application No) உள்ளிடவும். பிறகு Search பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக்காட்டும். அதில் Status எனும் இடத்தில் Send Back to Kiosk/Citizen என்று இருக்கும் இது போல் இருந்தால் அந்த விண்ணப்பம் திருப்பப்பட்டுள்ளது(Return Application) என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். எந்த காரணங்களுக்காக விண்ணப்பம் திருப்பப்பட்டுள்ளது(Return Application) என்பதை அறிந்து கொள்வதற்க்கு Remarks என்ற இடத்தை பார்க்கவும் அங்கு திருப்பப்பட்ட காரணம் இருக்கும்.

உங்கள் விண்ணப்பம் திருப்பப்பட்டுள்ளது(Return Application) என்பதை கண்டறிந்தவுடன், அந்த விண்ணப்பத்தை திரும்பவும் திருப்பியவருக்கே பதிவு(Resubmit)  செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

உங்கள் Citizen Portal அல்லது Franchisee Login-லில் உள்நுழையவும். பிறகு உங்கள் Dashboard-டில் Service என்று இருக்கும் அதை தேர்வு செய்யவும் பிறகு Department என்பதை தேர்வு செய்யவும் அதில் Revenue Department என்ற தேர்வை தேர்வு செய்யவும். அதில் வரும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றிதழை தேர்வு செய்யவும்.

இப்போது ஒரு புதிய விண்டோ வரும் அதில் மேலே 5 தேர்வுகள் இருக்கும் அதில் Retrun Application என்பதை தேர்வு செய்யவும். இப்போது திருப்பப்பட்டுள்ள அனைத்து சான்றுகளில் விவரங்களைகாட்டும். அதில் நீங்கள் எந்த விண்ணப்பத்தை திருத்தி மீண்டும் சமர்பிக்க விரும்பிகிறீர்களோ அந்த சான்றிதழுக்கு நேராக இருக்கும் Click Here எனும் நீலநிற தேர்வை தேர்வு செய்யவும்.

இப்போது உங்கள் விண்ணப்பம் மற்றும் விண்ணப்பத்தின் நிலை வரும் அதில் , நீங்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்த விவரங்களை திருத்தம் செய்ய விரும்பினால் View Application எனும் நீலநிற தேர்வை தேர்வு செய்யவும். பிறகு நீங்கள் திருத்தம் செய்ய வேண்டிய பகுதியை திருத்தம் செய்துவிட்டு கீழே வரும் Submit பட்டனை அழுத்தவும்.

கூடுதல் ஆவணங்கள் வேண்டி திருப்பப்பட்டு இருக்கும் பச்சத்தில் , Select Document என்ற தேர்வை தேர்வு செய்து நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பும் ஆவணத்தின் பெயரை தேர்வு செய்யவும். பிறகு ஆவண எண்ணை பதிவு செய்யவும். Add பட்டனை அழுத்தி ஆவணத்தை தேர்வு செய்யவும். பிறகு Upload பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் ஆவணம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.

இப்போது Remarks என்ற இடத்தில் நீங்கள் திருத்தம் செய்த அல்லது கூடுதல் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட விவரங்களை பதிவு செய்யவும் , பிறகு கீழ் Submit பட்டனை கிளிக் செய்தால் இப்போது உங்கள் விண்ணப்பம் மீண்டும் திருப்பி அனுப்பியவருக்கே சமர்ப்பிப்பு செய்துவிடும். இதனை சரிபார்க்க மீண்டும் ஒருமுறை உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்த்தல் , status என்பதில் Submitted to Tahsildar(அதிகாரியின் பதவி) இருக்கும். Remarks என்பதில் நீங்கள் பதிவு செய்த Remarks விவரங்கள் இருக்கும், இதைவைத்து உங்கள் விண்ணப்பம் மீண்டும் சரியாக சமர்ப்பிக்க பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை