PMJAY-Chief Minister Comprehensive Health Insurance Scheme (CMCHIS) மருத்துவ காப்பிடு அட்டையை Print செய்வது எப்படி?

 இந்த பதிவில் உங்களுக்கான பிரதமர் மற்றும் தமிழ் நாடு அரசு இணைந்து வழங்கக்கூடிய விரிவான மருத்துவ காப்பிடு அட்டையை அட்சிடுவது எப்படி என்பதனை இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம். அது மட்டும் இன்றி இந்த மருத்துவ காப்பிடு திட்டத்தின் விவரங்களை பார்ப்போம்.

திட்டத்தின் விவரம் :

இந்த திட்டம் பிரதமர் மற்றும் தமிழ் நாடு அரசு இணைந்து வழங்கும் விரிவான மருத்துவ காப்பிடு.

Scheem Name : (PMJAY) – Chief Minister Comprehensive Health Insurance Scheme (CMCHIS)

பிரதம மந்திரி ஜான் ஆரோக்யா யோஜன மற்றும் தமிழ் நாடு முதலைமைச்சரின் விரிவான காப்பிடு திட்டம் இணைக்கப்பட்ட தேதி.

Date of Roll-Out (Ayushman Bharat Pradhan Mantri Arogya Yojana (PMJAY)) : 23rd September 2018

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ருபாய் 5,00,000 வரை மருத்துவ காப்பிடு பெற முடிவும். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 5,00,000 வரை மருத்துவ செலவுகளை இதன் மூலம் செலுத்தலாம்.

இந்த திட்டத்தின் மருத்துவ காப்பிட்டு தொகையை மத்திய அரசு (60%) மற்றும் தமிழ்நாடு அரசு (40%) இணைந்து வழங்குக்கிறது.

இந்த ருபாய் 5,00,000 தொகை ஆண்டு தோறும் புதிப்பிக்கபடும் . (அதவது நீங்கள் 2018 ஆண்டு இந்த மருத்துவ காப்பிட்டு அட்டையை பயன்படுத்தி ருபாய் 2,00,000 செலுத்தி இருந்தால் , அந்த ஆண்டில் மீதி ரூபாய் 3,00,000 இருக்கும் ,இது அடுத்த ஆண்டு 2019 வரும் போது இந்த தொகை புதிப்பிக்கபட்டு மீண்டும் ரூபாய் 5,00,000 மாக மாறிவிடும், இதன் மூலம் இந்த ஆண்டு நீங்கள் உங்கள் மருத்துவ செலவிற்கு இந்த ரூபாய் 5,00,000 பயன்படுத்தி கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

(PMJAY) – Chief Minister Comprehensive Health Insurance Scheme (CMCHIS) என்ற திட்டத்தின் படிவத்தை பூர்த்தி செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து உங்கள் தாலுக்க அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கவேண்டும்.

மருத்துவ காப்பிடு கார்டு அச்சிடும் முறை :

அதக்கு உங்கள் மொபைல் அல்லது கணினியில் உங்களுக்கு விருப்பமான Browser-ரை Open செய்யவும் . அதில் https:\\cmchistn.com என்ற இணையதளத்தை தேடவும்.

இப்போது உங்களுக்கு அந்த இணையதளத்தின் முகப்பு பக்கம் வரும் , அதில் Beneficiary எனும் தேர்வை தேர்ந்து எடுக்கவும் அதில் Member Search / e Card என்ற தேர்வை தேர்ந்து எடுக்கவும்.

இப்போது New Tab-ல் தேடுவதர்க்கான படிவம் வரும் அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்து உங்கள் மருத்துவ காப்பிடு அட்டையை பெறலாம் .

URN No / Ration Card No / Beneficiary Name / Gender / Mobile No / District / Taluk / Village / Pincode என்று பல Option இருக்கும் அதில் உங்கள் வசம் உள்ள விவரங்களை பதிவு செய்து தேடுவதன் மூலம் உங்கள் மருத்துவ காப்பிடு அட்டையை பெறலாம்.

(இந்த பதிவில் பழைய குடுப்ப அட்டை(Ration Card No) எண்ணை பதிவு செய்து தேடுவது என்பதை இந்த பதில் பார்ப்போம். உங்களிடம் எந்த ஒரு விவரமும் இல்லை என்றால் நீங்கள் உங்கள் District(மாவட்டம்) , Taluk(வட்டம்), Village(கிராமம்) மற்றும் Pincode(அஞ்சல் எண்) இந்த விவரங்களை பதிவு செய்து தேடுவதன் மூலம் உங்கள் கிராமத்தில் உள்ள அனைவரின் மருத்துவ காப்பிட்டு அட்டையை பார்வையிடலாம் அதில் உங்கள் அட்டையை மட்டும் தேர்வு செய்து உங்கள் மருத்துவ காப்பிட்டு அட்டையை அட்சுயிட்டு கொள்ளலாம்.)

இப்போது Ration Card No எனும் இடத்தில் பழைய குடுப்ப அட்டை எண்ணை பதிவு செய்யவும் . பிறகு Search என்ற பட்டன்னை அழுத்தவும். இப்போது உங்கள் விவரங்கள் வரும் அதில் உங்கள் Ration Card எண்ணை தேர்வு செய்யவும்.

இப்போது New Tab-ல் உங்கள குடும்ப புகை படத்தின் கூடிய விவரங்கள் வரும் , அதன் கீழ் பகுதியின் Claim என்ற பகுதியில் நீங்கள் உங்கள் மருத்துவ காப்பிட்டு அட்டையை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சை செய்து இருந்தால் அதன் விவரங்கள் வரும்.

(மருத்துவ மனையின் பெயர் , Bill No, மருத்துவத்திற்கு செலவு செய்த தொகை , அதற்க்கான பதிவு தேதி , Claim Date போன்ற விவரங்களை பார்வையிடலாம்)

உங்கள் குடும்ப புகைப்படம் அருகில் Generate e-Card என்ற நிலநிற லிங்க்கை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுக்கான (PMJAY) – Chief Minister Comprehensive Health Insurance Scheme (CMCHIS) மருத்துவ காப்பிட்டு அட்டை வரும் அதை அச்சிட்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை