Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

PMAY-G/PMAY-U/பசுமை வீடு திட்டம் கீழ் இலவச வீடு பெற மனு அளிப்பது எப்படி? Free Home Scheme

20 அக்., 2021


 இந்த பதிவில் அளிக்ககூடிய PMAY-G திட்டம் /PMAY-U திட்டம்/பசுமை வீடு திட்டம் கீழ் இலவச வீடு பெற ஜமாபந்தியில்(https://gdp.tn.gov.in/jamabandhi/) அல்லது மாவட்ட ஆட்சியருக்கு(https://gdp.tn.gov.in/ இணையதளத்தின் மூலம்) மனு எப்படி பதிவு செய்வது என்பதை பார்ப்போம்.


https://gdp.tn.gov.in/jamabandhi/ அல்லது https://gdp.tn.gov.in/  என்ற இணையதளத்தை Open செய்யவும். இந்த இணையதளத்தில் முகப்பு பக்கம் வரும்.

GDP and Jamapanthi Web Site Login Page
GDP and Jamabanthi Web Site Home Page

அதில் Pop-Up ஒன்று வரும். அங்கு கைபேசி எண் என்று இருக்கும். அதில் உங்களது கைபேசி எண்ணை பதிவு செய்யவும். பிறகு குறியீடு எண் என்று இருக்கும் அதில் பக்கத்தில் இருக்கும் குறியீடு எண்ணை அதில் உள்ளவாறு பார்த்து இங்கு பதிவு செய்யவும். பிறகு உள்நுழைவு என்ற பட்டனை அழுத்தழும்.

GDP and Jamabanthi  Login Page
GDP and Jamabanthi Login Page

இப்போது ஜமாபந்தியில் மனு அளிக்க விண்ணப்பம் படிவம் வரும். அதில் முதலில் மனு தொடர்பான விவரங்கள் என்ற பகுதி வரும். அதில் உங்கள் மனு பற்றிய விவரங்களை தேர்வு செய்யவேண்டும் மற்றும் பதிவு செய்யவேண்டும்.

GDP and Jamabanthi Application Page
GDP and Jamabanthi Application Page and Selecting Petition Type

மனு பெற்ற வழி என்ற தேர்வு இருக்கும் அதில் ஜமாபந்தி மட்டுமே இருக்கும் அந்த தேர்வை மாற்ற முடியாது. இதுவே நீங்கள் https://gdp.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மனு அளித்தால் இந்த தேர்வு மாறி இருக்கும்.

மனு வகையில் என்ற தேர்வில் புதிய மனு பதிவு செய்ய போகிறீர்கள் என்றால் மனு(புதிய மனு) என்ற தேர்வை தேர்வு செய்யவும். நீங்கள் ஏற்கனவே சென்ற ஆண்டு ஜமாபந்தியில் மனு அளித்து உள்ளீர்கள் என்றால் குறை(மீண்டும் சமர்பிக்கப் படும் மனு) எனும் தேர்வை தேர்வு செய்யவும்.

GDP and Jamabanthi Selection Department
GDP and Jamabanthi Selection Department

பிறகு துறை என்பதில் ஊரக வளர்ச்சி துறை என்பதை தேர்வு செய்யவும்.

GDP and Jamabanthi Selection Processing Office Level
GDP and Jamabanthi Selection Processing Office Level

மனுப் பரிசீலனை அலுவலக நிலை என்பதில் அதுவே Collectorate என்பதை தேர்வு செய்துவிடும். நீங்கள் தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.

GDP and Jamabanthi Selection Main Category
GDP and Jamabanthi Selection Main Category

மனு முதன்மை பிரிவு என்ற தேர்வில் ஊரக/நகர்ப்புற வளர்ச்சி/உள்கட்டமைப்பு எனபதை தேர்வு செய்யவும்.

GDP and Jamabanthi Selection Sub Category
GDP and Jamabanthi Selection Sub Category

மனு துணை பிரிவு என்பதில் குழும வீடுகள்/பசுமை வீடுகள் அல்லது கூரை வீடு/இந்திரா வீட்டு வசதி திட்டம்,வீடுகள் என்பதை தேர்வு செய்யவும்.

GDP and Jamabanthi Selection Select the relevant office related to the petition below
GDP and Jamabanthi Selection Select the relevant office related to the petition below

பிறகு மாவட்டம் என்பதில் தங்களின் மாவட்டத்தை(District) தேர்வு செய்யவும்.

பிறகு வட்டம் என்பதில் தங்களின் வட்டத்தை(Taluk) தேர்வு செய்யவும்.

பிறகு வருவாய் கிராமம் என்பதில் தங்களின் வருவாய் கிராமத்தை(Revenue Village) தேர்வு செய்யவும்.

மனு விவரம் என்பதில் உங்கள் கோரிக்கை அல்லது புகாரை முழுமையாக, விரிவாக, தெளிவாக தமிழ் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும். தமிழில் தட்டச்சு செய்ய Tamil Typing Tool (https://www.azhagi.com/) or Google Tamil Typing Website (https://www.google.com/intl/ta/inputtools/try/பயன்படுத்தவும்.

GDP and Jamabanthi Copying Petition
GDP and Jamabanthi Copying Petition

பிறகு மனுவின் நகல்/துணை ஆவணங்கள் பதிவேற்றம்(கட்டாயம் இல்லை) என்ற தேர்வு வரும் அதில் மனுவை கையால் எழுதி அல்லது தட்டச்சு செய்து அனுப்புனர் கையொப்பம்யிட்டு தேதியிட்டு இங்கு பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யும் அளவு 1.5MB அளவும் JPEG அல்லது PDF வடிவில் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். இது கட்டாயம் கிடையாது. நீங்கள் வேறு மனு சம்மந்தமான ஆவணங்களை கூட பதிவேற்றம் செய்யலாம்.

GDP and Jamabanthi Fill Applicant Details & Communication Address
GDP and Jamabanthi Fill Applicant Details & Communication Address

மனுதாரர்  விவரங்கள் & தொடர்பு முகவரி என்ற பகுதி வரும். அங்கு உங்கள் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை பதிவு செய்யவேண்டும்.

கைபேசி எண் என்று இருக்கும் அங்கு நீங்கள் அளித்த கைபேசி எண் அதுவே நிரப்பி இருக்கும்.

பெயர் என்று இருக்கும் அதில் முதலில் உங்கள் தலைப்பு பிறகு பெயரை நிரப்பவும்.

தந்தை/கணவர் பெயர் என்பதில் உங்கள் தந்தை அல்லது கணவர் பெயரை நிரப்பவும்.

பிறகு பாலினம் என்பதில் ஆண்/பெண் என்பதை தேர்வு செய்யவும்.

பிறகு சமூகம் என்பதில் உங்கள் சமூகத்தின் பெயரை தேர்வு செய்யவும். (கட்டாயம் இல்லை)

சிறப்பு பிரிவு என்பதில் முன்னுரிமை கோரும் தேர்வை தேர்வு செய்யவும்.

முகவரி என்பதில் முதலில் கதவு எண்ணை நிரப்பவும், பிறகு தெரு என்பதில் உங்கள் தெருவின் பெயரை நிரப்பவும், பிறகு பகுதி/வார்டு/ஊர் என்பதில் உங்கள் பகுதி பெயர் அல்லது  வார்டு பெயர் அல்லது ஊர் பெயரை இதில் ஏதேனும் ஒன்றை நிரப்பவும். பிறகு மாவட்டம் என்பதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யவும், பிறகு வட்டம் என்பதில் உங்கள் தாலுக்காவை தேர்வு செய்யவும், பிறகு வருவாய் கிராமம் என்பதில் உங்கள் கிராமத்தின் பெயரை தேர்வு செய்யவும்.

அனைத்து விவரங்களையும் சரியாக நிருப்பிய பிறகு மற்றும் தேர்வு செய்த பிறகு ஒருமுறை அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

பிறகு சேமி என்பதை கிளிக் செய்யவும்.

GDP and Jamabanthi Selection Save Button
GDP and Jamabanthi Selection Save Button

இப்போது உங்கள் கோரிக்கை அல்லது புகார் வெற்றிகரமாக பதிவாகிவிடும். அதற்க்கான ஒரு ஒப்புகைச்சீட்டும் வரும். அதில் மனு எண் மற்றும் மனு தேதி இருக்கும்.

GDP and Jamabanthi Download For Acknowledgement
GDP and Jamabanthi Download For Acknowledgement

இப்போது மனுவின் நிலை சரிபார்க்க https://gdp.tn.gov.in/ என்ற இணையதளத்தை Open செய்யவும். அதில் மனுவின் நிலையை அறிய என்ற தேர்வு செய்யவும். இப்போது Pop-Up வரும், அதில் மனு எண் என்று இருக்கும் அதில் உங்கள் மனுவின் எண்ணை நிரப்பவும். பிறகு குறியீடு என்று இருக்கும் அதில் வலது புறத்தில் உள்ள அந்த குறியீடு எண்ணை அதில் உள்ளவாறு நிரப்பவும் பிறகு சமர்ப்பி எனும் பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் மனுவின் நிலை வரும், எத்தனை நாட்களாக மனு நிலுவையில் உள்ளது, எந்த எந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை பார்த்து கொள்ளலாம்.

மாதிரி மனு (Word File) தேவைப்பட்டால் Download File என்ற இந்த பட்டனை கிளிக் செய்து பிதிவிறக்கம் செய்து கொள்ளவும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்