தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது. அந்த இணைய தளம் மூலமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் ஒன்றிணக்க பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒருங்கிணைத்துள்ள இந்த இணைய தளத்தை முதலில் கிளிக் செய்யுங்கள்…
இந்த இணையத்தை கிளிக் செய்த உடன் இதுபோல ஒரு பக்கம் ஓப்பன் ஆகும். அதன் மேல் இடது முனையில் உள்ள login என்பதை அனுத்தவும்.
Login பட்டனை அழுத்திய பிறகு கீழ்கண்டவாறு ஒரு பக்கம் ஓப்பன் ஆகும்.
இதில் New applicant registration என்பதை அழுத்த வேண்டும்.அப்படி அழுத்தினால் கீழ்கண்டவாறு நம்மை பற்றிய விவரங்களை பதிவு செய்வதற்குரிய பக்கம் ஓப்பன் ஆகும்.
இந்த பக்கத்தில் கேட்டுள்ள விவரங்களை சரியாக பதிவு செய்யவேண்டும்.
குறிப்பாக பெயர், யூசர்நேம், பிறந்த தேதி,முகவரி,தொடர்பு எண்,மாநிலம்,,மாவட்டம் ,தாலூகா,ஊராட்சி,பின்கோடு, பான்கார்டு,ஆதார் கார்டு,இமெயில் ஐடி விவரங்கள் அவசியம் ஆகும்.
அனைத்தையும் சரியாக பதிவிட்ட பிறகு, இறுதியாக உங்கள் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துவிட்டு Create account என்பதை அழுத்தினால் உங்களுக்கான கணக்கு உருவாக்கப்படும்.
தற்காலிக பாஸ்வேர்டு கைபேசி எண்ணிற்கும்,இமெயிலுக்கும் வரும். அதன்பிறகு login செய்து விண்ணப்பத்தை பதிவு செய்ய தொடங்கலாம்.
என்னென்ன ஆவணம் தேவை, எப்படி விண்ணப்பிப்பது என்பதை அடுத்த செய்தியில் விரிவாக பார்ப்போம். முதலில் உங்களுக்கான கணக்கை தொடங்குங்கள்.