வேல் வேல் வேலவனே வேலாயுதா பாடல் வரிகள்

வேல் வேல் வேலவனே வேலாயுதா
வேங்கைமர மாணவரே வேலாயுதா
                         - வேல் வேல்
வேல் வேல் வேலவனே வேலாயுதா
வேதனைகள் தீருமையா வேலாயுதா
                          - வேல் வேல்
அருட்சுடராய் வந்தவரே வேலாயுதா
ஆறுமுக மாணவரே வேலாயுதா
                          - வேல் வேல்
திருச்செந்தூரில் வாழ்பவனே வேலாயுதா
என்மனதைத் தீர்த்திடுவாய் வேலாயுதா
                          - வேல் வேல்
பழனிமலை வேலவனே வேலாயுதா
பழவினையைத் தீர்த்திடுவாய் வேலாயுதா
                           - வேல் வேல்
பால்குடத்தின் கூட்டமெல்லாம் வேலாயுதா
பார்க்கப் பார்க்க ஆனந்தமே வேலாயுதா
                            - வேல் வேல்
திருத்தணிகை வேலவனே வேலாயுதா
திருவருளை அருளவேண்டும் வேலாயுதா
                            - வேல் வேல்
காவடிகள் ஆட்டத்தில் வேலாயுதா
கஷ்தமெல்லாம் தீர்ந்து போச்சு வேலாயுதா
                            - வேல் வேல்
சுவாமிமலை வேலவனே வேலாயுதா
சுப்ரமணிய மானவரே வேலாயுதா
                             - வேல் வேல்
சோலைமலை வேலவனே வேலாயுதா
சொர்க்கம் எல்லாம் தெரியுதய்யா வேலாயுதா
                              - வேல் வேல்
குன்றக்குடிக் குமரனே வேலாயுதா
குறவள்ளி மணாளரே வேலாயுதா
                              - வேல் வேல்
கருனையோடு காத்தருள்வாய் வேலாயுதா
கந்தா உன்னைத் தெண்டனிட்டோம் வேலாயுதா
                              - வேல் வேல்
ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஓன்று 
ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஓன்று
கூறும் அடியார்கள் வினைதீர்த்த முகம் ஓன்று
குன்றுருவாய் வேல்வாங்கி நின்ற முகம் ஓன்று
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஓன்று – குற 
வள்ளியை மணம் புனர வந்த முகம் ஓன்று
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலமாய் அமர்ந்த பெருமானே

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை