ஒரு படத்தின் பெயரை நாம் அந்தப் படத்தில் நடிகருக்குத் தான் வைத்து பார்த்திருப்போம் முதல் முதலில் அதை வடிவேலுக்கு சூட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ்
அதிகாரத்திற்கு வந்தால் மட்டும், இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் நிலை மாறிவிடுறதா என்ன' என்பதைப் பற்றிப் பேசுகிறது மாமன்னன்
மாரி செல்வராஜ் என்ன அரசியல் பேசி உள்ளார் மாமன்னனில் இடைவேளையில் புரிந்து கொள்ளலாம்
தனித்தொகுதி அரசியல் என்றால் என்ன என்பதை நறுக்கென்று கூறியிருக்கிறார்
உதயநிதியை விட பகத் பாஸில் நடிப்பு அருமை
என்ன அரசியல் பேச வேண்டுமோ அதை யார் மனமும் உண்படாதவாறு அருமையாக பேசி உள்ளார் Mari Selvaraj
படம் பார்க்கும்போது உதயநிதியின் சொந்தக் கட்சியே கண் முன் வந்து செல்கிறது.
கிளைமாக்ஸ் இல் சபாநாயகர் தனபால் அவர்களை ஞாபகப்படுத்துகிறது .
கம்யூனிஸ்ட் தோழராக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் அதை பட்டுப்படாமல் கொண்டு சென்று உள்ளார்கள் .
வடிவேலு நடிப்பு சொல்லவா வேண்டும் .
தேவர்மகன் இசக்கி தான் மாமன்னன் ஆனால் தேவர் மகனுக்கும் மாமன்னனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை கதை கொங்கு மண்டலத்தில் நடப்பவை .
மாமன்னன் பார்ப்பதற்கு முன் கொக்கரித்தவர்கள் எல்லாம் பார்த்த பிறகு சாந்தமாகி விடுவார்கள்.
மாரி செல்வராஜின் அரசியலையும் உதயநிதி ஸ்டாலின் அரசியலையும் கலந்து பேசி உள்ளார்கள்
ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்." என்பது மாரி நம் எல்லோருக்கும் சொல்லியிருக்கும் வாழ்நாளுக்கான பாடம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" இதுதான் மாமன்னன் படத்தின் சாராம்சம்
இளைஞர்களின் மத்தியில் வரவேற்பை பெரும் மாமன்னன்