Chat backup-களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்!


 

இது தவிர இந்த புதிய அப்டேட்டானது வாட்ஸ்அப்பில் இருந்து பேக்கப்ஸ்களில் ஸ்டார் செய்யபட்ட, சேட் ஹிஸ்ட்ரியை (chat history) பாதுகாக்கவும் பயன்படும் என்றும் கூறப்படுகிறது.


ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் App-ஆன வாட்ஸ்அப் கூகுள் டிரைவ் மற்றும் ஐக்ளவுட் உள்ளிட்டவற்றில் ஸ்டோர் செய்யப்படும் சேட் பேக்கப்களுக்கு (chat backups), எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (end-to-end encryption) வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய அப்டேட்டை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த சில நாட்களுக்கு பிறகு தற்போது வெளியிட துவங்கி இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூஸர்களுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட கிளவுட் பேக்கப்ஸ்களை உருவாக்கத் தொடங்குவதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்த புதிய அப்டேட்டை யூஸர்களுக்கு வழங்க துவங்கி உள்ளதாக வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது. கடந்த 2016 முதலே வாட்ஸ்அப் அதன் மெசேஜ்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்கி வருகிறது. தங்களது இந்த பாதுகாப்பு அம்சம் உலகளவில் நாளொன்றுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான யூஸர்களிடையே பரிமாறி கொள்ளப்படும் 100 பில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்களை பாதுகாக்கிறது என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

இதனிடையே வாட்ஸ்அப் யூஸர்கள் கிளவுடில் ஸ்டோர் செய்யும் சேட் பேக்கப்ஸ்களுக்கும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருப்பது அவசியம் என்று வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து யூஸர்களின் கோரிக்கைக்கு செவிமெடுத்த வாட்ஸ்அப் அதற்கான அப்டேட்டை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குநர்கள் உட்பட மூன்றாம் தரப்பால் (third parties) அணுகப்படுவதிலிருந்து தங்கள் பேக்கப்ஸ்களை பாதுகாக்க யூசர்களுக்கு இந்த புதிய அம்சம் உதவும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


இது தவிர இந்த புதிய அப்டேட்டானது வாட்ஸ்அப்பில் இருந்து பேக்கப்ஸ்களில் ஸ்டார் செய்யபட்ட, சேட் ஹிஸ்ட்ரியை (chat history) பாதுகாக்கவும் பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் சோஷியல் மீடியா மூலம், வாட்ஸ்அப் கிளவுட் பேக்கப்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பை வெளியிடுவதாக அறிவித்தார்.


இந்த புதிய அம்சம் கிளவுடில் ஸ்டோர் செய்யப்படும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூஸர்களின் பேக்கப்ஸ்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும், இந்த அம்சம் படிப்படியாக உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பதிவிட்டார். இன்னும் பரவலாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதால் நீங்கள் இந்த அப்டேட்டை பெற இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்


இந்த அப்டேட் உங்களுக்கு வரும்போது கிளவுட் பேக்கப்ஸ்களுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை மேனுவலாக செயல்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பதை கீழே பார்க்கலாம். முதலில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்து வலது மூலையில் இருக்கும் டாட்களை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் Settings-ல் நுழைந்து அதில் Chats-ற்கு செல்ல வேண்டும். பின்னர் கீழே காணப்படும் Chat Backups-ற்கு சென்று End-to-End encrypted backups-ற்கு செல்ல வேண்டும்.


அதனை தொடர்ந்து ஸ்கிரீனில் காட்டப்படும் வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். அனைத்து வழிமுறைகளும் முடித்து விட்டு இறுதியாக Done-ஐ டேப் செய்ய வேண்டும். பின் உங்கள் எண்ட்-டு-எண்ட் பேக்கப்பை வாட்ஸ்அப் ரெடி செய்வதை காணலாம். உங்கள் பாஸ்வேர்ட் அல்லது கீயை மறந்துவிட்டால் உங்களின் End-to-End encrypted backup-ஐ மீட்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை