2748 Village Assistant jobs: வரும் 10ம் தேதி வரை கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறதுதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டது. குறைந்தபட்சமாக 8ம் வகுப்பு கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பித்தாரர்களுக்கு கடந்த மாதம் 4ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதி தொடங்கிய இந்த நேர்காணல் வரும் 10ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கல்வித் தகுதிக்கு உயர்அளவாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்; வண்டி ஓட்டும் திறன்: உயர் அளவாக 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்; எழுதுதல் மற்றும் வாசித்தல் திறன்: உயர் அளவாக 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்; இருப்பிடச் சான்றிதழுக்கு இதற்கு உயர் அளவாக 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்; நேர்காணல் தேர்வுக்கு உயர் அளவாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஊழல், லஞ்சம், மோசடிகள் போன்றவற்றை ஏற்கக் கூடாது என்பதற்காகவே நேர்காணல் தேர்வுக்கான உயர் அளவு மதிப்பெண் வெறும் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தாலுகா அளவில், தாசில்தார், சிறப்பு தாசில்தார், ஏதேனும் இணை தாசில்தார் என 3 அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நேர்காணல் தேர்வு நடைபெறும். மூன்று பேரும், தனித்தனியாக மதிப்பெண் வழங்கி, அந்த மூன்றின் சராசரி மதிப்பெண்கள் மட்டுமே விண்ணப்பித்தாரர்களுக்கு அளிக்கப்படும்.
எந்தவித விதிமீறலும் இல்லாமல் இருப்பதாற்காக இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக, சிலருக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்குவது, ஒருதலைபட்சமாக செயல்படுவது ஓரளவுக்கு தடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தெரிந்துக் கொள்ள வேண்டியவை: அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நாளில், நேர்காணல் தேர்வுக்கு செல்ல வேண்டும். பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Marksheet), கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பத்தில் உள்ளது போன்று 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.