மாணவர்கள் உதவித்தொகை பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு வேண்டும்...!


ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வி பயின்று வரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி உதவித்தொகை பெற, தபால் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து, அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்க ளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 12 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2,443 மாணாக்கர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 6,417 மாணாக்கர்களுக்கு வருகிற 25 -ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாணவர்கள் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டு மில்லாமல் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை