அம்பேத்கர் தத்துவம் Ambedkar quotes in tamil

 மராட்டியத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், மத்திய பிரதேசத்தில் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்தான் ராம்ஜி சக்பால்.  பணி நிமித்தமாக அங்கு உள்ள மாவ் என்ற ஊரில்  வசித்தபோது இராம்ஜி  சக்பாலுக்கும், பீமாபாய்க்கும் பதினான்காவது பிள்ளையாக மகர் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தில், 1891 ஆம் வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி  பிறந்தவர்தான் அம்பேத்கார். ஆரம்பத்தில் அவருக்கு தாய் தந்தையர் வைத்த பெயர் பீமாராவ் இராம்ஜி.

பீமாராவ் இராம்ஜி சாத்தாரா எனும் பகுதியில் பள்ளி படிப்பை தொடங்கினார். தாழ்த்தப்பட்ட இனமானதால் எல்லா மாணவரோடு சேர்ந்து அமரக்கூடாது எல்லோரும் குடிக்கும் தண்ணீரை குடிக்கக் கூடாது, பிறர் மொண்டு தரும் தண்ணீரை கையில் வாங்கி குடிக்க வேண்டும். அவர்கள் புத்தககங்களை யாரும் தொடமாட்டார்கள். இப்படிப்பட்ட கொடுமைகளோடு படித்த போதும், அம்பேத்கரின் கல்வித் திறமையைக் கண்டு வியந்த பிராமண ஆசிரியரான கிருஷ்ண மகாதேவ் அம்பேத்கர் பீமாராவ் இராம்ஜி மீது சாதி வித்தியாசம் பார்க்காமல், அன்பு செலுத்தி அவரது கல்விக்கு ஆதரவாக இருந்தார். அவரது அன்பில் நெகிழ்ந்த பீமாராவ் இராம்ஜி என்ற தனது பெயருக்கு பின்னால் ஆசிரியரின் பெயரான அம்பேத்கரையும் சேர்த்து கொண்டார்.







அம்பேத்கர் தத்துவம்



"ஒருவன் தான் அடிமைப்பட்டு உள்ளதை உணர்ந்தாலே போதும், அவன் மீண்டு எழுந்து விடுவான்."

"கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கும் காசை, உன் பிள்ளையின் கல்விக்கு செலவிடு."

"தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணரக்கூட முடியாதவன் மனிதனே அல்ல."

"உன்னை ஒருவன் அவனது  அடிமை என்று நினைத்தால், நீ அவனை அழிக்கும் ஆயுதமாக மாற வேண்டும்."

"சாதி அமைப்பு என்பது, ஒரு இனத்தை பிரிக்கும் மாய வார்த்தை"

"ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும், மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதினால் அது மதம் அல்ல."

"அறிவு, நன்னடத்தை, சுயமாரியாதை இம்மூன்று மட்டுமே ஒருவர் வணங்க வேண்டிய தெய்வங்கள்."

"தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் உணர்வை மரத்து போக செய்வது."

"எதிர்ப்பு தெரிவிக்காத ஆடுகளையே கோவில்களில் பலி கொடுப்பார்கள். சிங்கங்களை அல்ல. தாழ்த்தப்பட்டவன் சிங்கமாக மாற வேண்டும்."

"மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்று பெயர் கிடைக்குமென்றால் அந்த பெயர் உனக்கு தேவையில்லை."

"சக மனிதனை தொடக்கூட உரிமை இல்லாத போது, இந்தியா என் தாய்நாடு என்று எப்படி சொல்ல முடியும்?"

"என்னை கடவுள் ஆக்காதே தோற்றுவிடுவாய். என்னை ஆயுதமாக்கு!"

"இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்களே கொண்டாட முடியும்"

"சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்"

"தன்னை உயர்ந்தவனாகவும் இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனிதன் அல்ல, மனநோயாளி!"

ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.

வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.


நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.


ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள். 

என்னைவிட உயர்ந்தவன் இருக்கிறான் என்று தாழ்த்தப்பட்டவன் எண்ணிக் கொள்கிறான்; என்னைவிடத் தாழ்ந்தவன் இருக்கிறான் என்று உயர்ந்த நிலையில் உள்ளவன் எண்ணிக் கொள்கிறான்; இரண்டுமே நல்லதல்ல! உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதே தவறு.

சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம்! அதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானம். சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது எளிதான காரியமல்ல. பல துன்பங்களை எதிர்கொள்ளும்படி இருக்கும்; கடினமாகவும் போராட வேண்டியிருக்கும்.

இந்த சமூகம் தீண்டத்தகாதவர்களைத் தனக்குத் தேவையானபோது மட்டும் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் ஒதுக்கி வைத்துவிடுகிறது. செருப்பைப் போட்டிருப்பவன் வீட்டுக்கு வெளியிலேயே அதைவிட்டுவிட்டு உள்ளே சென்று விடுவதுபோல சமூகம் தீண்டத்தகாதவர்கள் என்று கூறி சிலரை மட்டும் தள்ளிவைத்து விடுகிறது.

மதம், சமத்துவத்தை வளர்க்க வேண்டும். அடிமைத்தனத்தை அல்ல! தன்னைப் பின்பற்றுபவர்களையே மடையனாக்கித் தண்டிக்கிற அமைப்பு எப்படி மதமாக இருக்க முடியும்? 

நீங்கள் வளைந்து கொடுத்து வாழ முயற்சிப்பீர்கள். ஆனால் அது வாழ்க்கை ஆகாது! நாட்டுக்காகவும் நல்ல நோக்கத்துக்காகவும் சகலத்தையும் விட்டுவிடத் துணிவதே நல்ல வாழ்க்கையாகும். ஒதிய மரம் போல பயனற்றுப் பலகாலம் வாழ்வதா? ஒரு உன்னத லட்சியத்துக்காக இன்னுயிர் ஈவதா? எது நல்லது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! 

வறுமை யாருக்கும் விதிக்கப்பட்டதில்லை! அது உடன்பிறந்ததோ, தீர்க்க முடியாததோ அல்ல! 

மக்களாட்சி வெற்றி பெற வேண்டுமானால் அரசியல் அமைப்பு மக்களின் சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைத் தீர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

நீங்கள் சுயமாய் அறிய முயற்சி செய்யுங்கள். சுயமாய் எதையும் அடைய முயற்சி செய்யுங்கள். அதுதான் உயர்வதற்கான வழி. உங்கள் தன்மானத்தை இழக்காமல் உயர விரும்பினால் அதுவே வழி!

நீங்கள் சுயசிந்தனை உள்ளவர் என்றால் சுதந்திரமானவர் என்று அர்த்தம். சுதந்திரம் உள்ளவரால்தான் சுயமாய் சிந்திக்க முடியும். எதையும் அறிவின் துணைகொண்டு சோதித்து அறிந்து கொள்ளுங்கள்.

யார் ஒழுக்கமும் நேர்மையும் உடையவராய் சமுதாயத்துக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்கிறாரோ அவர்தாம் தொண்டு செய்யத் தகுதியானவர்.


நியாயமும் நேர்மையும் உங்கள் பக்கம் இருந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் போராட்டம் நீங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்குத்தானேயன்றி பணம் பதவிகளுக்காக அல்ல!

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

வாழ்க்கை நீளமானதாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பானதாய் இருக்க வேண்டும்.

தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி.

சிறப்பு

அம்பேத்கார் பெயரில் இந்தியாவில் நான்கு விமான நிலையங்கள் உள்ளன.


அம்பேத்கார் பெயரால் நான்கு உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன.


நான்கு பெரிய நகரங்களுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


அம்பேத்கார் பிறந்த நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அம்பேத்கார் பெயரில் இந்தியா முழுவதும் ஒன்பது அரசு மருத்துவமனைகள் உள்ளன.


எட்டு இடங்களில் அம்பேத்கர் பெயரில் அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் உள்ளன.


ஆறு முக்கிய நகரங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன.


ஆறு இடங்களில் அம்பேத்கர் பெயரில் பெரும் மைதானங்கள் உள்ளன.


பதினோரு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அம்பேத்கர் பெயரில் செயல்படுகின்றன.


சிறுவயதில் கல்வி மறுக்கப்பட்ட அம்பேத்கர் பெயரால் பதிமூன்று கல்வியல் பல்கலைக் கழகங்கள் இயங்குகின்றன.


கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 22 இடங்களில் செயல்படுகிறது.


பாபா சாஹிப் அம்பேத்கருக்கு இந்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1980ல்  வழங்கியது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை