eshram போர்ட்டலில் பதிவு செய்வது எப்படி?How to get e-shram card? Apply online!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு இ-ஷ்ரம் (e-SHRAM) இணையதளத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதில் தொழிலாளர்களின் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த  அமைப்பில் தொழிலாளர்களின் பெயர், தொழில், முகவரி, கல்வித் தகுதி, திறமைகள், குடும்ப விவரம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தகவல் அமைப்பும் இதுவே.

இ-ஷ்ரம் அமைப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிளாட்பார்ம் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே நாடு முழுவதும் சுமார் 16 கோடிக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் அமைப்பில் இணைந்துள்ளனர்.

இதற்கான பதிவு முழுக்க முழுக்க இலவசம். பொது சேவை மையங்கள் அல்லது அரசு அலுவலகங்களில் ஈசியாக பதிவு செய்துகொள்ளலாம். இந்தியாவில் உள்ள 38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்யவும், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வழங்கவும் இ-ஷ்ரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

இ-ஷ்ரம் இணையதளத்தில் ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது?
எப்படி பதிவு செய்வது?
இதில் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக https://register.eshram.gov.in/#/user/self என்ற இணையதளத்தில் சென்று Self registration என்ற ஆப்சனில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், கேப்சா எண், EPFO, ESICல் சந்தாதாரா என்பதை கொடுத்தால், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஒடிபியை கொடுத்து லாகின் செய்து, தேவையான விவரங்களை பதிவிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவும் உண்டு

இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் விபத்து காப்பீடாக 2 லட்சம் ரூபாய் PMSBY திட்டத்தின் மூலமாக பெறலாம். இது தவிர அனைத்து சமூக நலத்திட்டங்களையும் இந்த போர்ட்டல் மூலமாக பெற முடியும்.

உதாரணத்திற்கு கொரோனா போன்ற நெருக்கடியாக காலக்கட்டங்களில் மக்களுக்கு உதவ இந்த போர்ட்டல் உதவிகரமாக இருக்கும்.

இங்கும் பதிவு செய்து கொள்ளலாம்?

இது குறித்து தொழிலாளர் அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் அமல்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அருகிலுள்ள CSC( commen service centers)களில் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை