300 Mbps வேகத்தில் 1200ஜிபி அதிவேக டேட்டா; ஏர்டெல்-ன் பெஸ்ட் திட்டம் அறிமுகம்.! 300 Mbps வேகத்தில் 1200ஜிபி அதிவேக டேட்டா; ஏர்டெல்-ன் பெஸ்ட் திட்டம் அறிமுகம்.!

பார்தி ஏர்டெல், அதன் 300 எம்பிபிஎஸ் வேகத்திலான புதிய ஹோம் பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுதான் தற்போது வரையிலாக ஏர்டெல் வழங்கி வரும் மிக வேகமான பிராட்பேண்ட் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய எப்டிடிஎச் (Fiber-To-the-Home) அடிப்படையிலான ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் விலை என்ன.? இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டா நன்மையின் அளவு என்ன.? டேட்டாவுடன் சேர்த்து அழைப்பு நன்மைகள் மற்றும் இதர சிறப்பு சலுகைகள் ஏதேனும் உண்டா.?

நன்மைகள்.! ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த 300 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டமானது, ரூ.2199/- என்கிற மதிப்பை கொண்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற எஸ்டிடி / லோக்கல் அழைப்புகள் உட்பட 1200ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது.

இலவச சந்தா.! மேலும், வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் OTT பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் அணுகலாம். அதாவது - Wynk Music and Airtel TV போன்றவைகளின் பயன்களையும் அனுபவிக்கலாம்.

வின்க் மியூசிக் & ஏர்டெல் டிவி.! வின்க் மியூசிக் ஆப் ஆனது தன்னுள் மூன்று மில்லியன் பாடல்களைக் கொண்டுருக்க, அதே நேரத்தில் ஏர்டெல் டிவி ஆனது 350-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 10,000/-க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தன்னுள் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நெட்வொர்க்கில் சேரத்தூண்டும்.! இந்திய சந்தையின் மிகப்பெரிய பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சிறப்பான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டமானது ஏர்டெல் நெட்வொர்க்கில் சேரத்தூண்டி, பயனர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

வரம்பற்ற டேட்டா அறிவிக்கப்பட்டு இருந்தால்? மொத்தம் 1200ஜிபி என்கிற அளவிலான டேட்டாவானது, இது ஒரு ஹோம் பிராட்பேண்ட் பயனர்களுக்கு போதுமானதாக உள்ளது. இருப்பினும் கூட, வரம்பற்ற டேட்டா என்கிற வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தால், அது இன்னும் சிறப்பான திட்டமாக இருந்திருக்கும்.

விலையானது, வட்டத்திற்கு வட்டம் மாறுபடும்.! புதிதாக தொடங்கப்பட்ட இந்த 300 எம்பிபிஎஸ் வேகத்திலான பிராட்பேண்ட் திட்டத்தின் விலையானது, வட்டத்திற்கு வட்டம் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில், தற்போது ரூ.2199/-க்கு கிடைக்கிறது. ஆக ரீசார்ஜ் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டுமுறை, நன்மைகளை பரிசோதித்துக் கொள்ளவும்.

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்