ரஜினியின் புதிய படத்தின் பெயர் பேட்ட

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலா படத்தை முடித்துக்கொண்டு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படம்நடிக்க களமிறங்கினார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா கைக்கோர்த்துள்ளார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி நடிக்கும் 1656 வது திரைப்படமான இந்த படத்திற்கு பேட்ட என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலு ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும், வகையில் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
உதயம் மலர்

புதியது பழையவை