இராதாபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு வாலிபர் சங்கத்தின் சார்பாக காதலர் தினம் கொண்டாடப்பட்டது

இராதாபுரம் : காதலர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இராதாபுரம் தாலுகா குழு சார்பாக இன்று இராதாபுரம் பேருந்து நிலையத்தின் முன்பு வைத்து புறாக்களை பறக்க விட்டு  காதலர் தினம் கொண்டாடப்பட்டது திருநெல்வேலி மாவட்ட தலைவர் குட்டன் மற்றும் தோழர்கள் புறாக்களை பறக்க பறக்கவிட்டு நிகழ்வை தொடங்கி வைத்தனர் நிகழ்வில் இராதாபுரம் தாலுகா தலைவர் உதயம் சுரேஷ் தலைமை வகித்தார்  செயலாளர் ராஜன், தாலுகா துணை செயலாளர் சிவா, பொருளாளர் இசை முருகன் , ஜெயக்குமார் சமத்துவபுரம், தோழர் நிதிஷ் மற்றும் ஆட்டோ சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை