இராதாபுரம் ஜோ சிட்டியில், A.R.அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட மலாலா படிப்பகம் நிரந்தர கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

இராதாபுரம் ஜோ சிட்டியில், A.R.அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட மலாலா படிப்பகம் நிரந்தர கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டு விழா


 திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தாலுகாவை சார்ந்த இளைஞர்கள் இணைந்து 13 வருடங்களுக்கு முன்பு "மலாலா படிப்பகம்" எனும் கட்டணமில்லா இலவச டியூசன் சென்டரைத் துவங்கினார்கள். மலாலா படிப்பகத்தில் TNSPC, VAO, Bank Exam, NEET, JEE க்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிக்குழந்தைகளுக்கான ஸ்போக்கன் இங்க்லிஷ் வகுப்புகள், மாலை நேர டியூசன் சென்டர் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இவை மட்டுமின்றி கோவிட் முதல் அலையில், கடும் பட்டினிக்குள்ளான 250 குடும்பங்களுக்கு சுமார் 1 1/2 லட்சம் மதிப்பீட்டிலான அன்றாட உணவுத்தேவைக்கான பொருட்களை வழங்கினார்கள். கோவிட்  2-ம் அலையில் சுமார் 5000 உணவுப்பொட்டலங்களை பசியோடிருப்பவர்களுக்கு வழங்கினார்கள்

இந்த சூழலில் குடிசையிலான வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்து கொண்டிருந்த மலாலா படிப்பகத்தை நிரந்தர கட்டிடமாக மாற்றிட தீர்மானித்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராதாபுரம் ஜோ சிட்டியில் வைத்து நடைபெற்றது.

A.R.அறக்கட்டளை நிறுவனர் A.R.ரஹ்மான் அவர்கள் மலாலா படிப்பகத்திற்கான அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முருகேசன், உதயத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன், விஜயாபதி VAO மணிகண்டன், காரியாகுளம் பிரகாஷ், ராஜ்குமார், "அமிழ்து" மணிகண்டன், அஸ்வதி மெல்வின், ஆமையடி அப்துல்லா, தோழர் உதயம் சுரேஷ், சிவா, லெனின் ராஜா, இசை முருகன், சுபா, ராஜன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் மலாலா படிப்பகத்தின் கட்டுமான பொறியாளார் யேசு ராஜா நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை