28 ஏப்., 2018ஏப்ரல் 28, 2018
இராதாபுரம் : உதயத்தூர் ஊராட்சி உதயத்தூர் கீழூர் பகுதியில் தலித் மக்கள் வாழும் ஊரில் இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் புகைப்படம் ஒட்டிய ஊரின் பெயர் பலகை வைத்திருந்தனர் ஏப்ரல் 27ம் தேதி தலித் மக்களின் 11 ம் திருவிழா இராதாபுரம் நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த நிலையில் உதயத்தூர் கீழூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் பெயர் பலகையை மர்ம நபர்கள் கிழித்து விட்டு ஊரின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த அரசாங்க சோலார் இன்வெர்ட்டரையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர் உதயத்தூர் மக்களின் ஒற்றுமை சீர்குலைக்க வேலையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் கூறினர் பேனர் கிளிப்பால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
உதயத்தூர் பகுதியில் அம்பேத்கர் பேனரை கிழித்து சென்ற மர்மநபர்கள்...!
.png)
By உதயம் மலர்
28 ஏப்., 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்