சுவையன சமையல்

சி எலுமிச்சை அவல் ரெசிபிரெ
  1. அவல் கொண்டு நிறைய ரெசிபிக்கள் செய்யலாம் . அதில் ஒன்று தான் எலுமிச்சை அவல் ரெசிபி . இது மிகவும் ஈஸியான , ​​அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவும் கூட . மேலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் . அதுமட்டுமல்லாமல் , பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம் . சரி , இப்போது அந்த எலுமிச்சை அவல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா ! தேவையான பொருட்கள் : அவல் - 3 கப் எலுமிச்சை - 2 ( சாறு எடுத்துக் கொள்ளவும் ) கடுகு - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை பச்சை மிளகாய் - 2 ( நீளமாக கீறியது ) வெங்காயம் - 2 ( நறுக்கியது ) உருளைக்கிழங்கு - 1 ( வேக வைத்து நறுக்கியது ) வேர்க்கடலை - 1 கப் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : முதலில் அவலை நீரில் 10 நிமிடம் அவல் மென்மையாகும் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து , அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , கடுகு , பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் . பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும் . பின் உருளைக்கிழங்கை போட்டு , மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும் . அடுத்து , வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி விட்டு , இறுதியில் அவலை போட்டு , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறி இறக்கி , எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி , மேலே கொத்தமல்லியை தூவினால் , சுவையான எலுமிச்சை அவல் ரெசிபி ரெடி
  2.  
மட்டன் பிரியானி


தேவையான பொருட்கள் ; -
அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1 / 4 கிலோ
வொங்காயம் - 1 / 4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1 / 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை - 1
புதினா - 1 / 2 கட்டு
கொத்தமல்லி - 1 / 2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் ( தேவைக்கு )
நெய் - 50 கிராம் ( தேவைக்கு )
உப்பு - தேவைக்கு
கேசரிப்பவுடர் - தேவைக்கு
அரைக்க வேண்டியவை ; -
இஞ்சி , பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும் .

பட்டை - 5 , லவங்கம் - 5 , ஏலக்காய் - 5 , மிளகாய்த்தூள் , மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை ; -
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் , நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை -5 , லவங்கம் -5 , ஏலக்காய் -5 போட்டு அத்துடன் இஞ்சி , பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் .

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும் . 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி , வெங்காயம் , பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் .

அத்துடன் தக்காளி , புதினா , கொத்தமல்லி , சேர்த்து கிளறி . பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும் .

முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு , கேசரி பவுடர் , எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும் .

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும் . ( தம் விடவும் ) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும் .

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்





கேரட் பீன்ஸ் சூப்



குளிர்காலத்தின் மாலை வேளையில் சூப் குடித்தால் , குளிருக்கு இதமாக இருக்கும் . ஆனால் அந்த சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன . அதில் ஒன்று தான் கேரட் பீன்ஸ் சூப் . இந்த சூப் செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி , அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் . மேலும் பேச்சுலர்கள் கூட மாலை வேளையில் இதனை முயற்சிக்கலாம் . சரி , இப்போது அந்த கேரட் பீன்ஸ் சூப் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா !





தேவையான பொருட்கள் : சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - 1 / 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 2 டீஸ்பூன் கேரட் - 1 ( பொடியாக நறுக்கியது ) பீன்ஸ் - 3 ( பொடியாக நறுக்கியது ) உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1 / 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு , அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி , நன்கு கலந்து கொள்ள வேண்டும் . பின்பு ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து , அதில் தண்ணீர் ஊற்றி , நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு , சிறிது உப்பு சேர்த்து , காய்கறிகளை வேக வைத்து , நீரை வடித்துவிட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும் , 1 / 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி , பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும் . பிறகு அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி , வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து , தேவையான அளவு உப்பு சேர்த்து , கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் , சுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி ! குறிப்பு : இதன் மேல் கொத்தமல்லி , மிளகு தூள் மற்றும் கார்ன் சிப்ஸ் சேர்த்து சாப்பிட்டால் , கேரட் பீன்ஸ் சூப்பானது இன்னும் ருசியாக இருக்கும் .












கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை