எனினும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
இந்நிலையில் தற்போது WhatsApp-ல் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான வசதி சில பயனர்களின் அப்பிளிக்கேஷன்களில் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி பயனர் ஒருவர் குறித்த வசதியினை உடைய WhatsApp-ன் ஸ்கிரீன் ஷாட்டினை வெளியிட்டிருக்கின்றார்.
இந்த ஸ்கிரீன் ஷாட்டின்படி முன்னைய WhatsApp இனை விடவும் வித்தியாசமான பயனர் இடைமுகத்தினை கொண்டமையும், Calls, Texts மற்றும் Contacts டேப்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் தெளிவாக தெரிகின்றது.