தீபாவளி ஸ்பெஷல்


செல் போன் பயன்படுத்துபவர்கள் தன்னுடைய வீட்டின் தொலைபேசி என்னை     " Home " என்றோ அல்லது Wife,DADDY , MUMMY என்று சேவ் செய்யுங்கள். உங்களது தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்களுக்கு விபத்து ஏற்ப்பட்டலோ உங்கள் வீட்டுக்கு தொடர்புகொள்ள  எளிதாக இருக்கும்.  பலர் தங்களுடைய தொலைபேசியில் மனைவியை செல்லம், புச்சிகுட்டி,பன்னிகுட்டி என்று சேவ்  செய்து உள்ளனர். உங்களது  மனைவி புச்சிகுட்டியா  இல்லை  பண்ணிகுட்டியா  என்று   அடுத்தவனுக்கு எப்படி தெரியும்.
*************************************************************************************************************
 தீபாவளிக்கு துணி எடுக்கலாம் என்று கடைக்கு போனவர்களில் பலர் மனநிம்மதியை இழந்து தான் வீடு திரும்புகின்றனர் காரணம் நமக்கு பிடித்ததை வாங்க முடியாததே. துணிக்கடைக்குள் செல்லும் முன்பே என்ன விதமான(மாடல்) துணி  அல்லது நிறம் போன்றவற்றை முடிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள் கடைக்காரன் உங்களை பார்த்தவுடன் யூகித்து விடுவான் உங்களை எப்படி ஏமாற்றுவது என்று.  நீங்கள் கோடு போட்ட சட்டை என்று கேட்டல் போதும் அவன் எல்லாம் துணியையும் அள்ளி உங்கள் முன் கொட்டிவிடுவான்  , இது தான் அவனுடைய பிஸ்னஸ் ட்ரிக்ஸ்  உங்களுக்கு அந்தக்கடையில் இருக்கும் ஆடை பிடிக்கவில்லை என்றால் கூட தர்மசங்கடத்தில் ஆழ்த்தி  வாங்க வைத்துவிடுவான். உங்களுக்கு பிடிக்காத துணியை அவன் உங்களுக்கு  காண்பித்தாலோ அல்லது விரித்து வைத்தாலோ கறாராக சொல்லிவிடுங்கள் இந்த மாதிரி டிசைன் காட்டவேண்டாம் என்று. அதே போல் நீங்கள் விரும்பிய நிறமோ அல்லது டிசைனோ அந்த கடையில் இல்லை என்று உங்களுக்கு தெரிந்து விட்டால் கடைக்காரனிடம் பேச்சு கொடுக்காமல் உடனே வேறு கடைக்கு செல்ல முயலுங்கள்.
*************************************************************************************************************
பொருட்களை வாங்கலாம் என்று  பஜார் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் உடன் நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள். மனைவியை அழைத்து செல்பவராக இருந்தால் பேரம் பேசும் இடங்களுக்கு அழைத்து செல்லாதிர்கள், ஒருவேளை உங்களை கடைக்காரன்  ஏமாற்றிவிட்டால்  மனைவியிடம் உங்கள் ஹீரோயிசம் குறைய வாய்ப்பு உள்ளது .  அதேபோல்  பொருட்களுக்கு பேரம் பேசி தகராறு ஏற்ப்பட்டு பொருள் வாங்கும் நிலைமை ஏற்ப்பட்டால் பொருளை வாங்கியப்பின் பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் கடைக்காரன் பணத்தை வாங்கியப்பின் 10 ரூபாய் போட்டு கொடுங்க கட்டுபடி ஆகாது என்று மிரட்டுவது போல் கேட்ப்பான்.
*************************************************************************************************************
வீட்டு உபகரண பொருட்களை  வாங்குபவர்கள் வாங்கும் பொருளை பற்றிய தகவல்களை  முன்பே விசாரித்துவிட்டு கடைக்குசெல்லுங்கள். கடைக்காரன் நல்லப்பொருளை காட்டுவான் என்று நம்பி செல்லாதிர்கள். கடைக்காரர்களுக்கு  எதில் லாபம் அதிகமோ அந்தப்பொருளை தான் உங்கள் கண்முன் காட்டுவார்கள்.  எக்காரணத்தை கொண்டும் வாரண்டி கார்ட் இல்லாமல் பொருட்களை வாங்காதிர்கள் பொருளை வீட்டுக்கு கொண்டுவரும் முன் வாரண்டிகார்ட் , பில் போன்றவை சரியாக உள்ளதா என்று சரிப்பார்க்கவும். அதேபோல் வாரண்டி கார்டில் கடைக்காரரின் கடை முத்திரை, விற்பனையாளரின்   கையப்பம் உள்ளதா என்று சரிப்பாருங்கள் consumer  கோர்ட்டுக்கு செல்ல அதுதான் முக்கியம்.
*************************************************************************************************************
செல் போன், டிவி, மிக்சி போன்ற அட்டைப்பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கும்  முன் அட்டைப்பெட்டி பிரிக்கப்படாமல் உள்ளதா  என்று சரிப்பர்த்தப்பின் வாங்கவும். அதே போல் பொருளை வாங்கியப்பின் அட்டைப்பெட்டியை மீண்டும் ஒட்டும் டேப்பால் நன்றாக ஒட்டி விட்டு கடைக்காரரின் வண்டியில் எடுத்துவர சொல்லுங்கள். நாம் வாங்கும் முன் அட்டைப்பெட்டி பிரிக்கப்பட்டு இருந்தால் எக்காரணத்தை கொண்டும் வாங்காதீர்கள்.
*************************************************************************************************************
PROMOTER -  நீங்கள் இவரை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.ப்ரொமோட்டர் என்றால் தனக்கு கொடுக்கப்பட்ட நிறுவனத்தின் பொருளை மட்டும் வாடிக்கையாளரிடம் காண்பிப்பது அல்லது பேசுவது.  நான் இவரை பற்றி விரிவாக பதிவு போடுகிறேன் இப்போதைக்கு  சுருக்கமாக சொல்லுகிறேன் புரிந்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கடையிலும் ஒரு கம்பனி அல்லது நிறுவனத்தின் ப்ரொமோட்டர்கள் இருப்பார்கள் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பொருளை மட்டும் தான் உங்களுக்கு காண்பிப்பார். உதாரணத்துக்கு நீங்கள் LG பொருள் வாங்க கடைக்கு   செல்லும்போது அந்த கடையில் இருக்கும் நபர் SAMSUNG ப்ரொமோட்டர்ராக  இருந்தால் உங்களுக்கு SAMSUNG பொருட்களை மட்டுமே காண்பிப்பார். உங்களை திசை திருப்ப முயலுவார். SAMSUNG பொருளில் இருக்கும் நன்மைகளை மட்டுமே சொல்லுவார் LG வேண்டாம் என்று பரிந்துரைப்பார்.  இதனால் உங்களுக்கு பிடித்த பொருள் வாங்க முடியாமல் போகலாம்.  எக்காரணத்தை கொண்டும் நீங்கள் முடிவு செய்து வைத்திருந்த நிறுவனத்தை மாற்றி வேறு ஒரு நிறுவனத்தின் பொருளை வாங்காதீர்கள்.
************************************************************************************************************


கவனிக்க வேண்டிய  பிசுருகள்:
 
☼ உடன் அழைத்து சென்ற குழைந்தைகளின் எண்ணிக்கை.
☼ATM  கார்ட் எந்த பாக்கெட்டில் உள்ளது என்று.
☼கடையில் இருந்து செல்லும்முன் ATM கார்ட் வாங்கி விட்டோமா என்று.
☼மனைவியின் பின்புறம்( எவனாது இடித்துவிடாமல் இருக்க).
☼வாங்கிய பொருட்களின் எண்ணிக்கையும் பில்லில் உள்ள    எண்ணிக்கையும்     சரியாக உள்ளதா என்று.
☼ ரயில் ரிட்டர்ன் டிக்கெட் வாங்கி இருந்தால் எந்த பாக்கெட்டில் உள்ளது என்று.
☼கடையில் நாம் பைகளுக்கு டோக்கன் வாங்கி இருந்தால் டோக்கன் உள்ளதா என்று. 
☼கடையில் இருந்து வெளியே வரும்போது பொருட்களை கையில் எடுத்து விட்டோமா என்று.
☼புறப்படும் நேரம், கிளம்பும் நேரம்.

தீபாவளி வாழ்த்துக்கள்
புதியது பழையவை