உங்கள் மொபைல் தொலைந்தால் கண்டுபிடிப்பது எப்படி?

தினமும் நூற்றுக்கணக்கான மொபைல்கள் காணாமல் போகிண்றன. தொலைந்த மொபைல் தற்போது இருக்கும் இடத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ள முடியும் மேலும் அதன் பாஸ்வேட்டை மற்றவோ முழுவதுமாக நம் தகவல்களை அழிக்கவோ முடியும்.

சிவாஜி படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் லேப்டாப்பை திருடி தகவல்களை திருட முயல்வான் அப்போது மூன்று முறை தவறான பாஸ்வேர்டை உபயோகப்படுத்திய உடன் எல்லா தகவல்களும் அழிந்து விடும். இப்போது இது போல ஒரு அசத்தலான விஷயத்தை உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலிலும் செய்ய முடியும். எப்போதும் நம் மொபைல் தொலைந்து போவது ஒரு கஷ்டமான விஷயம்தான் ஆனாலும் நம் தனிப்பட்ட தகவல்கள் ( நாம் புகைப்படங்கள் பின் நம்பர்கள் போன்றவை) தவறான கைகளுக்கு போகாமல் காப்பற்ற முடியும்.

அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வருங்கள்.

முதலில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்

Settings -> Security -> Device Administrator க்கு சென்று அதனை Activate செய்து கொள்ள வேண்டும்.

பின் Settings -> Location services -> Google’s Location Services ஐயும் Activate செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் உங்கள் மொபைலை எங்கிருந்தும் இயக்க தயாரகிவிட்டீர்கள். பின் இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் கூகுள் அக்கவுன்ட்டை லாகின் செய்து பின் Add my Device ஐ க்ளிக் செய்து கொள்ளவும் பின் உங்கள் மொபைலின் LOCATION திரையில் காட்டப்படும்.

இந்த வசதி மூலம் உங்கள் மொபைலை RING செய்ய வைக்கவோ, புதிய LOCK போடவோ, முழுமையாக தகவல்களை அழிக்கவோ முடியும்.


* # 06 # என்ற நம்பரை உங்கள் மொபைலில் டயல் செய்யவும்.
உங்கள் மொபைல் திரையில் ஒரு 15 இலக்க எண் வரும்.
அந்த எண்ணை மிக பத்திரமாக எங்காவது குறித்து வைத்துகொள்ளுங்கள்.இது உங்கள் மொபைல் திருடப்பட்டு இருந்தால் மிகவும்உபயோகமாக இருக்கும்.
ஒரு வேளை உங்கள் மொபைல் திருடப்பட்டு இருந்தால் அந்த இலக்க ஐஎம்இஐ நம்பரை (cop@vsnl.net) என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
போலிசுக்கு செல்ல தேவை இல்லை.
உங்கள் மொபைல் வேறு சிம் உபயோகத்தில் இருத்தலும் அதிநவீன ஜிபிஆர்எஸ் மற்றும் இன்டர்நெட் மூலம் செய்து கண்டு பிடிக்கப்படும்.

மின்னஞ்சலில் கீழே உள்ள விபரங்களை இணைத்து அனுபவும்:
உங்கள் பெயர்:
மொபைல் மாடல்:
வருடம்:
கடைசியாக பேசிய எண்:
உங்கள் மின்னஞ்சல்:
தொலைந்த நாள்:

உங்கள் கருத்துகளை பகிரவும் ... நன்றி

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை