Auto Like வேனுமா

கட்டாயம் முழுமையாகப் படிக்கவும்!!!
Auto Liker பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை!!!
தற்போது Auto Liker பாவனையாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது, தனது பேஸ்புக் பதிவுகள் மற்றும் போட்டோக்களுக்கு அதிக Likes மற்றும் Comments வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இதனைப் பாவனை செய்கின்றனர்.
ஆனால் இவர்கள் ஒன்றை கவனத்திற்கொள்ள தவறிவிட்டார்கள்! Auto Liker பாவனை செய்வதால் தனது பேஸ்புக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள்!
Auto Liker பாவனை செய்ய வேண்டும் என்றால் உங்கள் பேஸ்புக் கணக்கிலிருந்து Auto Liker வழங்குணருக்கு Access token மூலமாக அனுமதி வழங்க வேண்டும். நீங்கள் அவ்வாறு அனுமதி வழங்குவதன் மூலமாக உங்களுடைய பேஸ்புக் கணக்கை Auto Liker வழங்குனர்களால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது! அதாவது அவர்களால் உங்கள் Messages ஐப் பார்வையிடல, Messages அனுப்புதல், உங்கள் கணக்கிலிருந்து பதிவிடல் போன்ற அனைத்தையும் செய்ய முடிகிறது. ஆகவே இவர்கள் இதனைப் பயன்படுத்தி உங்கள் கணக்கை தேவையானவாறு உபயோகித்துக் கொள்கின்றனர், அதாவது இவர்கள் இலாப நோக்கத்திற்காக பெரும்பாலும் ஆபாச பதிவுகளை உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் சேர்ந்திருக்கும் Group களில் ஷேர் செய்கிறார்கள்! ஆனால் இது உங்களுக்குத் தெரியாது என்பதே முக்கிய விடயம், இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் Account > Activity log க்குச் சென்று பார்வையிடுங்கள்! அங்கே நீங்கள் செய்யாத எத்தனையோ விடயங்கள் நடைபெற்றிருக்கும்! சில வேலைகளில் ஆபாச பதிவுகள் ஷேர் செய்யப்பட்டிருப்பதை உங்களால் பார்க்க முடியாமலிருக்கும், ஆகவே உங்கள் நண்பர் ஒருவரின் கணக்கின் மூலமாக உங்கள் கணக்கை பார்வையிடுங்கள் இதன் மூலம் இதனை அறியலாம்!
அது மட்டுமல்லாது பேஸ்புக் நிறுவனமானது இப்பாவனையாளர்களது கணக்கில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது, அதில் முக்கிய ஒன்று தான் நீங்கள் போடும் பதிவுகள் மற்றும் போட்டோக்களுக்கு Likes வராது! நீங்கள் Auto Liker பாவனை செய்வதன் மூலமாக மட்டுமே Likes ஐப் பெற வேண்டி ஏற்படுகிறது! இதனை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாது! அது மட்டுமன்றி பேஸ்புக் நிறுவனமானம் இவர்களது கணக்குகளை சிறிது காலத்தின் பின்னர் முடக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது! இது போன்ற பல விடயங்கள் உங்கள் கணக்கின் மூலமாக நடைபெறுகின்றது!
ஆகவே இதை தடுக்க வேண்டும் என நினைக்கும் தற்போதைய பாவனையாளர்கள் உங்கள் கணக்கில் Account settings இல் Apps க்குச் சென்று "HTC Sense", "Blackberry", "iOS" என்பவற்றை நீக்கிவிடுங்கள்! இதனை நீக்காவிட்டால் நீங்கள் Auto Liker தளங்களுக்குச் செல்லாவிட்டாலும் உங்கள் கணக்கில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும்!
இதனை அதிகம் ஷேர் செய்யுங்கள்! like emoticon

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை