ஆன்ட்ராய்ட் மொபைல் டேட்டா விரைவாக தீராமல் பயன்படுத்துவது எப்படி? | ஆன்ட்ராய்ட் போன் யூஸ் பன்றவங்களுக்கு கண்டிப்பா யூஸ்புல்லா இருக்கும்ங்க

ஆன்ட்ராய்ட் மொபைலில் நெட் டேட்டா குறையாமல் (Mobile Data) பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. எதிர்பார்த்ததுக்கு முன்பே மொபைல் டேட்டா திடீரென காலியாகிவிடும். இதனால் ஏற்கனவே இருக்கும் மொபைல் பேலன்சில் (Mobile Balance) நெட் சர்வீஸ் (InterNet Service) கொடுப்பவர்கள் கை வைத்துவிடுவார்கள். எனவே மொபைல் இணையம் விரைவாக தீராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
using-less-data-in-android-phone
ஆன்ட்ராய்டு மொபைலில் இணையம் விரைவில் தீராமல் பயன்படுத்துவது எப்படி?

1. மொபைல் மூலம் ஆன்லைனில் கேம்ஸ் விளையாடுவதை தவிர்ப்பது நல்லது. இதனால் அதிக மொபைல் டேட்டா வீணாகும்.
2. இணையத்தை அணுகுவதற்கு சரியான "மொபைல் பிரௌசர்" தேர்ந்தெடுப்பது நல்லது. உதாரணமாக Chrome Beta Browser  அற்புதமாக செயல்படுகிறது. மொபைல் டேட்டாவை குறைத்துப் பயன்படுத்துவதில் இதுதான் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து Pass Browser பயன்படுத்தலாம். மற்ற பிரோசர்களான firefox, android web browser, Dolphin, Uc Browser போன்றவைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
3. கூகிள் மேப் இயக்குவதை தவிர்க்கலாம். google map பார்க்க வேண்டுமென்றால் WiFi டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்
4. ஆன்ட்ராய்ட் ஆப் அப்டேட் செய்வதற்கும் Wifi டேட்டாவை பயன்படுத்தலாம். மொபைல் டேட்டா மூலம் அப்டேட் செய்தால் உங்களுடைய பெருமளவு டேட்டாவை எடுத்துக்கொள்ளும். எனவே இரு வாரத்திற்கு ஒரு முறை அப் அப்டேட் செய்ய Wifi டேட்டாவை உபயோகபடுத்தலாம்.
5. யுடீயூப் வீடியோக்கள் பார்க்க Offline Feature பயன்படுத்தலாம். Wifi நெட் கிடைக்கும்போது, அதன் மூலம் Make Offline செய்த பிறகு அந்த வீடியோக்களை தங்கு தடையின்றி பின்னர் பார்க்கலாம்.
6. மை டேட்டா மேனேஜர் ஆப் / My Data Manager பயன்படுத்தலாம். இந்த ஆப் உங்கள் மொபைல் டேட்டாவை சேமிக்க பயன்படுகிறது.
7. மொபைலில் இருக்கும் ஆப்கள் அனைத்துமே இணையத்தில் சர்வருக்கு பிங் (Ping) செய்து கொண்டிருக்கும். இதனால் உங்கள் மொபைல் டேட்டா விரைவில் காலியாகலாம். எனவே இதை தடுப்பதன் மூலம் இணையப் பயன்பாட்டை தடுக்கலாம். மொபைலில்  Settings => Data Usage க்குள் சென்று தேவையில்லாத ஆப்கள் பிங் செய்வதை நிறுத்திவிடலாம்.
8. ஒனவோ கவுண்ட் (Onavo Count) ஆப் பயன்படுத்தலாம். இது எவ்வளவு டேட்டா பயன்படுத்தபட்டிருக்கிறது என்பதை காட்டுவதோடு டேட்டாவை சேமித்தும் தரவும் செய்கிறது.
9. கிளீன் மாஸ்டர், பேட்டரி சேவர் போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்த தேவையே இல்லை... இந்த ஆப் செய்யும் வேலைகளை நீங்களாகவே (Manual) செய்துவிடலாம். Settings சென்று Storage => Cached Data வை கிளிக் செய்து cache ஐ கிளியர் செய்துவிடலாம். அதே போல ஜங்க் பைல்கள் (JUNK Files) நீக்க ஃபைல் மேனேஜர் இஎஸ் எக்ஸ்ப்ளோரர் ES Explorer சென்று தேவையில்லாத போல்டர்களை நீக்கிவிடலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை இப்படி செய்தால் போதுமானது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை