ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை தபால் மூலமாக திருத்தம் செய்ய வசதி


ஆதார் பதிவு செய்தும் அடையாள அட்டை கிடைக்காதவர்கள், பொது இ-சேவை மையங்களில், ஆதார் எண்ணுடன் கூடிய பிளாஸ்டிக் அட்டை பெற்றுக்கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கியவர்கள் பலர் தங்களது அட்டையில் முகவரி, செல் போனே எண்கள் தவறாக பதிவாகியுள்ளதாகவும், சிலரது அட்டையில் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும் புகார் கூறி வந்தனர்.

இதையடுத்து, ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய, வழிவகை செய்யப்பட்டுள்ளது. https://uidai.gov.in/update-your-aadhaar.data.htmlஎன்ற இணையதள முகவரியை பயன்படுத்தி, இப்பணியை மேற்கொள்ளலாம்.

இதில் செய்யப்படும் அனைத்து வகையான திருத்தங்களுக்கும், மொபைல் எண் மிகவும் முக்கியம். "ஆன்-லைன்' மூலமாக பதிவு செய்ய, மொபைல் எண்ணுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே, ஒருவரது ஆதார் விவரங்களை திருத்த முடியும்.

பெயர் திருத்தம் அல்லது முகவரி திருத்தம் செய்ய, பாஸ்போர்ட், "பான்' கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவண நகல்களை பயன்படுத்தலாம். பிறந்த தேதியை திருத்தம் செய்ய, பிறப்பு சான்று, கல்விச்சான்று, பாஸ்போர்ட், "குரூப்-ஏ' நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
"ஆன்-லைன்' மூலம் திருத்தம் செய்ய, தங்களது ஆவண நகல்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், கம்ப்யூட்டர் மையங்களில் எளிதாக இப்பணியை மேற்கொள்ளலாம். மொபைல் எண் தவறாக இருந்தால், எவ்வித திருத்தமும் செய்ய இயலாது. தபால் மூலம் விண்ணப்பித்து சரி செய்யவும், வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 "மொபைல் எண் தவறாக இருந்தால், ஆதார் அட்டையில் எவ்வித திருத்தமும் நேரடியாக செய்ய முடியாது. மொபைல் என் உள்ளிட்ட பலவகை மாற்றங்களுக்கு, தகுந்த ஆதாரங்களுடன், அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்கலாம். முறையாக பூர்த்தி செய்த படிவங்களை, UIDAI, Post Box No.99, Banjara Hills, Hyderabad - 500 034, India என்ற முகவரிக்கு அனுப்பினால், விவரங்கள் திருத்தம் செய்யப்பட்டு, அதுகுறித்து, விவரங்களை மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும். கம்ப்யூட்டர் மையங்களில் படிவம் பெற்று, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பூர்த்தி செய்து அனுப்பலாம்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்