ட்வின் கேமரா என்பது ஒரு ஆன்ட்ராய்ட் கேமிரா அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிகேஷன் மூலம் இரட்டையர்கள் படங்களை எடுக்க முடியும்.
படம் எடுக்க வேண்டியவரை முதலில் இடப்பக்கம் நிறுத்தி ஒரு போட்டோ எடுத்த பிறகு மீண்டும் அவரையே வலப்பக்கம் வைத்தும் போட்டோ எடுக்கலாம்.
இவ்வாறு இரண்டு முறை எடுத்த போட்டோக்களை ப்ராச்சஸ் செய்து ஒரே பிண்ணனியில் உள்ள அருமையான ட்வின் பிக்சரை கொடுக்கும்.
இதில் உள்ள கிளாக் ஐகானை கிளிக் செய்து ஒன்று அல்லது இரண்டு படங்களுக்கும் இடையேயான நேரத்தை செட் செய்திடலாம். இதனால் உங்களுடைய விருப்பத்திற்கேற்ப சரியான அமைவில் படங்களை எடுக்க முடியும்.
உங்கள் ரசனைக்கேற்ப நீங்கள் இதுபோன்ற படங்களை எடுத்து இணையத்தில் இலவசமாக படங்களைப் பகிரும் தளங்கள் (Facebook, Instagram, Picasa) மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரலாம். இமெயில் கூட செய்யலாம்...