ஏப்ரல் 1

இந்த முட்டாள்கள் தினத்தன்று சில நல்ல விஷயங்களும்,© மறக்க முடியாத நிகழ்வுகளும் கூட உலகில் நடந்திருக்கிறது✳♻. 
 
♻சிறை தண்டனை பெற்ற ஹிட்லர்
1924ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்று வெளிவந்துவிட்டார்.
♻இந்திய ரிசர்வ் வங்கி
கடந்த 1935 ஆண்டு ஏப்ரல் முதல் நாள் தான் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
♻நயா பைசா அறிமுகம்
ஏப்ரல் ஒன்று 1957 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
♻புலிகள் காப்பகம்
கடந்த 1973 ஆண்டு ஏப்ரல் ஒன்னு அன்று தான் நமது இந்திய அரசு, புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டத்தை இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கியது
♻ஆப்பிள் நிறுவனம்
1976 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று தான் ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.
♻ஈரான் நாடு
கடந்த 1979 ஆம் ஆண்டு இன்றைய தினத்தன்று தான், ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
♻வால்வெள்ளி
ஹேல்-பொப் வால்வெள்ளி பூமியின் சுற்றுப்பாதை வீச்சைக் கடந்ததும் கடந்த 1997 ஆண்டு இன்றை தினம் அன்று தான்©
♻ஒருபால் இனத்தவருடனான திருமணம்
கடந்த 2001 ஆண்டு ஏப்ரல் முதல் தினத்தன்று, நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
♻கூகுள் மின்னஞ்சல்
2004 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, கூகுள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ள ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதை முதலில் உலக மக்கள் முட்டாள் தினத்திற்கான ஏற்பாடு என கருதினர். பின் இது உண்மையாகவே வெளியிடப்பட்டது மேலும் ...http://udhayammalar.blogspot.com

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை