சிறுநீரை‬ நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால் வரக்கூடிய ஆபத்துக்கள் !

அசௌகரியம் மற்றும் வலி நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். வனச்சிதறல் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது.
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சிறுநீரக நோய் சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.
சிறப்பு குறிப்பு : மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக  இருப்பின், வெளியே இருக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர்ப்பை விரைவில் நிறைந்துவிடும்.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்