பெரும்பாலும் முடி கொட்டுவதைத் தவிர்க்க ஷாம்புவை மாற்றுவோம் அல்லது பல்வேறு கலவைகளை நமது தலையில் மொழுகி குளிப்போம்.
இவை எல்லாமே மேல் வேலைகள்தான். எவ்வளவுதான் செடிக்கு தண்ணீர், உரம் போட்டாலும், வேரில் தானே விஷயம் இருக்கிறது.
அதுபோலத்தான், உங்கள் உடல் நலனில்தான் முடி வளர்ச்சியும் அடங்கியுள்ளது. அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரக்க வேண்டிய சில ஹார்மோன் பற்றாக்குறையாலும் முடி கொட்டலாம் என்கிறது மருத்துவம்.
ஹார்மோன் சுரப்பிகளை சரி செய்ய நமது உணவிலேயே மருந்து உள்ளது. புரதம் நிறைந்த பருப்பு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்