ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்

ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற HTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.


HTTPS என்றால் என்ன?
பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.- Wikipedia
சுருக்கமாக சொன்னால் ஒரு இணையதளத்திற்கும், அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும் முறை ஆகும்.

விரிவாக காண இணைய பாதுகாப்பு தொடரை படிக்கவும்.

தற்போது இந்த வசதியை ப்ளாக்கர் தளம் இலவசமாக வழங்குகிறது.

ப்ளாக்கரில் Settings => Basic பகுதிக்கு சென்று, அங்கு "HTTPS availability" என்ற பகுதியில் Yes என்பதை தேர்வு செய்து சேமிக்கவும். அவ்வளவு தான்!

இதனை செய்த பிறகு உங்கள் ப்ளாக் முகவரிக்கு முன் https:// என்று வரும்.உதாரணத்திற்கு,

http://udhayammalar.blogspot.com/ என்ற முகவரி இந்த வசதியை வைத்த பிறகுhttps://udhayammalar.blogspot.com/ என்று வரும்.

கவனிக்க:
  1. இந்த வசதியை வைத்த உடனேயே பழைய முகவரிக்கு செல்லும் போது தானாக புதிய தளத்திற்கு செல்லாது. சிறிது காலம் ஆகும்.
  2. இந்த வசதியை வைத்தால் சில டெம்ப்ளேட் வசதிகள் அல்லது விட்ஜட்கள் வேலை செய்யாது.
  3. டாட் காம் போன்ற கஸ்டம் டொமைன்களுக்கு இந்த வசதி பொருந்தாது.
உண்மையில் இந்த பாதுகாப்பு வசதிஅனைத்து தளங்களுக்கும் அவசியமானதாகும்.

மேலும் இந்த வசதியைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும்!.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்