தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி இருக்குமென்றால் அதைக்காட்டிலும் தமிழ் சினிமாவின் பேய்களின் எண்ணிக்கை அதிகம் போல. நகைச்சுவை பேய் படங்களின் வரிசையில், மற்றுமொரு பேய் படம் தான்“ஹலோ நான் பேய் பேசுறேன்”.
இருட்டில் வந்து மிரட்டிய பேய்கள், சீலிங் ஃபேனில் தொங்கிக்கொண்டு அச்சுறுத்தும் பேய்கள், வெறுமென பின்னாடி வந்து நின்று மிரட்டும் பேயகளுக்கு மத்தியில் இந்த பேய் முற்றிலும் வித்தியாசப்படுகிறது.திருடனான வைபவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல், காதல் கல்யாணமாக கனியும் நேரத்தில் தான் திருடிய ஒரு மொபைல் போன் மூலம் பேயிடம் மாட்டிக்கொள்கிறார் வைபவ், இவர் மாட்டியதுபோதாதென்று இவரின் வருங்கால மச்சான்களான VTV கணேஷ், அவரின் சகோதரர் சிங்கப்பூர் தீபன்என கூட்டாக மாட்டிக்கொள்கிறார்கள்.பின் எவ்வாறு பேயிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
ஹீரோ வைபவ் குறும்புத்தனமான சேட்டைகளின் மூலமும், பேயை பார்த்து மெர்சல் ஆகும் போதும் ரசிக்க வைக்கிறார். படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் மட்டுமே ஐஸ்வர்யாவிற்கு இடம் உள்ளது (நடிப்பதற்க்கான இடமா என்றால் அது கேள்விக்குறி தான்). படத்தின் காமெடியை காப்பாற்றுவதன் பொறுப்பு VTV கணேஷ், சிங்கப்பூர் தீபன் மற்றும் யோகி பாபுவின் கையில்தான் உள்ளது. மூவரும்அவர்களின் பங்கை சரியாக செய்துள்ளனர். ஆனால் சிங்கம்புலி, கருணாகரண், ‘ஜாங்கிரி’ மதுமிதா இவர்கள் எதற்கு என கேள்வி எழுகிறது. ஒவியா பேயாக வருகிறார், ஆனால் பேய்க்கே படத்தில்Guest Role”.
பேய் படம் என்றுசொல்லிவிட்டு ”எப்ப பேய காட்டுவிங்கன்னு” ஆர்வமா வந்த ரசிகர்களை கிட்டத்தட்ட இடைவேளை வரை பேயை காட்டாமல் மற்ற காதல்-காமெடி காட்சிகளை காட்டி ரசிகர்களை “இது பேய் படம் தானா“ என்று டிக்கட்டை சரிபார்க்க வைத்துவிட்டீர்களே Director பாஸ்கர் அவர்களே. HiphopBattle போல் குத்து டான்ஸ் Battle, வித்தியாசமான முறையில் சரக்கடிப்பது, க்ளைமேக்ஸில்கருணா விஷயத்தில் கொடுக்கும் தீர்ப்பு என படம் முழுவதும் ஒரே வித்தியாசம்தான் போங்க. ஆனால் எல்லாவித ஆடியன்ஸையும் கவருமா என்பது கேள்விக்குறி.
ஆனாலும் பல இடங்களில்VTV கணேஷ் , சிங்கப்பூர் தீபன் மற்றும் யோகி பாபுவின் Perfect Timing வசனங்களால் சிரிப்பொலியில்நிறைகிறது அரங்கம். ஒட்டுமொத்த படமும் ஒரு ஷாட்ஃபிலிம் எஃபெக்ட் கொடுக்கிறது, மேக்கப் CGயில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் நேரத்தை குறைத்தது படத்தின் பெரும்பலம்.
பானுமுருகனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு படத்திற்கு தேவையான அளவு உதவியுள்ளது. சித்தார்த் விபின் இசையில் மட்டுமல்லாமல் படத்தில் தோன்றியும் கலக்கியுள்ளார்.
VTV கணேஷ் , சிங்கப்பூர் தீபன் மற்றும் யோகி பாபுவின் Perfect Timing வசனங்கள், படத்தின் நேரம், வித்தியாசமான முறையில் சில விஷயங்களை கையாண்டது.
வித்தியாசம் என்ற பெயரில் மொக்கையான பல விஷயங்கள், பல நல்ல நகைச்சுவை நடிகர்களை வீண்செய்தது, கதை திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். லாஜிக்கிற்கு கொஞ்சமேனும் இடம் கொடுத்திருந்திருக்கலாம்.
மொத்ததில் “ஹலோ நான் பேய் பேசுறேன்” தீவிர காமெடி பேய்பட ரசிகர்கள் Attend செய்யலாம்.