ஸ்மார்ட் போனில் கூகுள் டுயோ !

வீடியோ அழைப்பு

கூகுள் டுயோ வீடியோ
அண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில் (Google I/O 2016), Duo app என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த இருப்பதாக, கூகுள் அறிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் இன்னொரு செயல்பாடாக, இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு தரப்பட இருக்கிறது. இந்த அப்ளிகேஷன், மொபைல் போன்களில் இயங்கும், ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு பேசக் கூடிய வகையில் இது செயல்படும். மிக எளிமையானதாக இது அமைக்கப்பட்டு வருகிறது. மொபைல் போனில், தொடர்பாளர் பட்டியலில், தொட்டு இயக்கி, அடுத்த முனையில் இருப்பவரை அழைப்பது போல, இதில் விடியோ வழியாக அழைக்கலாம். இருவர் தங்கள் போன்களில், ஒருவருக்கொருவர் பார்த்தபடி பேசிக் கொள்ளலாம்.
இந்த ஆண்டில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் இயங்கும் வகையில் இந்த அப்ளிகேஷன் தரப்பட இருக்கிறது. இது மொபைல் போன் எண் அடிப்படையில் இயங்கும். நம் contacts list உள்ள எவரையும் இதன் மூலம் அழைத்துப் பார்த்து விடியோ அழைப்பாக இயக்கி பேச முடியும்.
கூகுள் டுயோ வீடியோ
மிக எளிமையாக இது செயல்படுகிறது. அழைப்பிற்கான எண்ணை இயக்கியவுடன், நேரடியாக அந்த எண் உள்ள மொபைல் போனைத் தொடர்பு கொண்டு, கேமராவினையும் இயக்கி, காட்சியை நேரடியாகக் காட்டுகிறது.
இந்த செயலியில் Knock Knock என்று ஒரு செயல்பாடு உள்ளது. நீங்கள் விடியோ அழைப்பினை எடுத்து இயக்கும் முன், அழைப்பவரைப் பற்றிய முன் திரைக் காட்சி காட்டப்படும். இதன் மூலம், தன்னை அழைப்பவர் யார், எங்கு உள்ளார் என்பதனை, அழைப்பு பெறுபவர் அறிந்து கொள்ள முடியும்.
இதில் இயக்கப்படும் விடியோ திறன் 720p HD ரெசல்யூசன் வரை இருக்கும். ஆடியோ ஒலியும் மிகத் தெளிவாக இருக்கும். நெட்வொர்க் வேகம் மற்றும் பிற தடைகளைப் பொறுத்து இந்த செயலி இயங்கும். அனைத்து விடியோ அழைப்புகளும், இரு முனைகளிலும் சுருக்கப்படுவதால், மற்றவர் குறுக்கிட்டு அறிய முடியாது. வை பி மற்றும் மொபைல் டேட்டா வழி இதனை இயக்கலாம்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை