வாகனங்களில் பிஎஸ் 3 என்றால் என்ன? அதற்கு தடை ஏன்? வாகன நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?


இந்தியா நீண்ட காலமாகவே வாகனங்கள் வெளியிடும் புகை குறித்த ஆய்வுக்கு மேற்கத்தைய நாடுகளின் தொழில்நுட்பத்தையே நம்பி இருந்தது. ஆனால் தற்போது மேலை நாடுகள் வாகன தயாரிப்பின் போதே தங்களது வாகனங்கள் வெளியிடும் புகை குறித்த கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

பிஎஸ்3 என்றால் என்ன?
பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) என்ற அடிப்படையில் மோட்டார் வாகனப்புகை காற்று மாசாவதை தடுக்கும் விதமாக சில கோட்பாடுகளை வரையறை செய்து அதன்படி பிஎஸ்3 என்பது பின்பற்றப்பட்டு வருகிறது. ( 1,2 என்ற நிலை காற்றை அதிகம் மாசுபடுத்துவதாகும். 3 என்பதே குறைந்தபட்ச காற்றை மாசுபடுத்தாத நிலை)

இது மோட்டார் வாகனங்களில் உள்ளெரி என்ஜின்கள் வெளியிடும் புகை காற்றை மாசுபடுத்தாத வகையில் இருக்க வேண்டும். இந்த பிஎஸ்3கோட்பாடு மேற்கத்தைய நாடுகள் பின்பற்றி வந்தது. அதையே இந்தியாவும் பின்பற்றி வந்தது.

இந்தியாவில் 1991ம் ஆண்டில் முதன்முதலில் பெட்ரோல் என்ஜின்களுக்கு இந்த பிஎஸ்3 சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டிலேயே டீசல் வாகனங்களுக்கும் இது அமல்படுத்தப்பட்டது.

2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் எல்லா இந்திய தலை நகரங்களுக்கும் இந்த பிஎஸ்3 சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்திற்கும் புகைத்திறன் சோதனை நடத்தப்பட்டது. காற்றை அதிகமாக மாசுப்படுத்தும் வாகனங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

2010ம் ஆண்டில் இந்தியா முழுமைக்கும் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலுமே மேற்கத்தைய நாடுகள் பின்பற்றி வந்த பிஎஸ்3 கோட்பாட்டையே, இந்தியாவும் பின்பற்றியது. ஆனால் மேற்கத்தைய நாடுகள் ஈரோ 4 ( 2005), ஈரோ 5 (2009), ஈரோ 6(2014) என அடுத்தடுத்த கட்டங்களுக்கு மாறிவிட்டன. அதாவது வாகனங்கள் வெளியிடும் புகை, காற்றை மாசுபடுத்துவதில் இருந்து கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. ஆனால், இந்தியா தற்போது அதாவது ஏப்ரல் 1முதல் தான்  பிஎஸ்4 கோட்பாட்டுக்கே வருகிறது.

சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட், வணிக ரீதியான நடவடிக்கைகளைவிட இந்திய மக்களின் ஆரோக்கியம் முக்கியமாகும். ஆகவே வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகன தயாரிப்பின்போதே சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காற்றை மாசுபடுத்தும் புகை கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வாகனங்கள் தயாரிக்க வேண்டும். காற்றை மாசுபடுத்தாத வாகனங்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தது.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை