மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் பிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 25.4. கிராம் என்ற விகிதத்தில் பிப்ரினோஜன் உள்ளது.
ரத்தத்தில் எத்தனை
குரூப்புகள் உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. `A’, `B’, `AB’, `O’ என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர, உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. O பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், O குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு யுனிவர்சல் டோனர் என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால் A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப்பாகும். இந்த இரண்டு ஆன்டிஜனும் இருந்தால், AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லை என்றால் O குரூப் ஆகும்.
ஆர்.எச். நெகட்டிவ் ரத்தத்தை, ஆர். எச். பாசிட்டிவ் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தலாமா? செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்.எச். ரத்தத்தை செலுத்தக் கூடாது.