பொதுவாக ப்ராயிலர் கோழி சாப்பிட்டால்,அது உடல்நலத்திற்கு கேடு,ஆபத்து,அதை சாப்பிட வேண்டாம் என்றும் நம்மை சுற்றி இருப்பவர்கள் கூறுவார்கள்அறிவுறையும் கூறுவார்கள்.ஆனால் அதனை சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் சரியாக கூறியிருக்கமாட்டாங்க.
ஒருவர் அதனை சாப்பிட கூடாது என்று கூறினால் மற்றொருவரும் அதையேதான் கூறுவார்.அப்படி என்ன தான் இருக்கு.வாங்க பார்க்கலாம்.ப்ராயிலர் கோழி சாப்பிடக் கூடாது,ஏன்?
வெறும் 40 நாட்களிலேயே வளர்த்து விற்பனைக்கு வரும் ப்ராயிலர் கோழியின் உணவில் 12 விதமான வேதிப் பொருட்கள் கலக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த கோழிகளுக்கு அதிகபடியான ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.இந்த அதிகபடியான ஆண்டிபயாட்டிக் கொடுப்பதால் கோழிக்கு இயற்கையாக வரும் குணப்படுத்தக்கூடிய நோய்களும்,பின் குணப்படுத்த முடியாமல் போக செய்கிறது.
இந்த மருந்துகள் தான் சின்னஞ் சிறு பெண்களை விரைவில் வயதுக்கு வர செய்கிறது.
ப்ராயிலர் கோழிகளின் சதைகளில் அதிக அளிவிளான கொழுப்புகள் உள்ளன.இதனை நாம் சாப்பிடுவதால் உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் செருகின்றன.
இந்த கெட்ட கொழுப்பு நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த கொழுப்புகள்அதிகரிப்பதால், அது இரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்துகிறது.இதன் காரணமாகதான் இரத்த அழுத்தமும் ஏற்படுகிறதாம்.
அது மட்டுமல்லாமல் 100 ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோயும் ஏற்படுகிறதாம்.
இந்த ப்ராயிலர் கோழியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலிலும்,சிறுநீரகத்திலும்,புற்று நோய் ஏற்படுகிறதாம்.
தொடர்ந்து ப்ராயிலர் கோழி சாப்பிட்டு வரும் மக்கள் குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
ப்மாயிலர் கோழியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகளில் இருக்கும் சத்தானது குறைந்துக்கொண்டே வருகிறது.
மஞ்சள் காமாலை,இரைப்பை,கல்லீரல் என நோய்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ப்ராயிலர் கோழியை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களின் உடலில் ஆண்களை காட்டிலும் அதிகபடியான கொழுப்புகள் சேர்கின்றன என உணவு நிபுணர் சுனிதா நேக்ரா கூறுகிறார்.
இது தைராய்டு மற்றும் ஹார்மோன் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றனவாம்.
ஆகையால் நாட்டு கோழியை சாப்பிட்டு உடல் நலம் பெற்று வாழுங்கள்.நன்றி!.