JIO சிம்முக்கு போட்டியாக களமிறங்கியது பதாஞ்சலி சிம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பல கொடுத்து கவர்ந்து வரும் நிலையில் பதாஞ்சலி நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது.
பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு துவங்கி பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
பதஞ்சலி நிறுவனத்தில் வெளிவரும் பொருட்கள் ரசாயனக் கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுவதாகவும், இயற்கையான முறையில் உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரபடுத்தப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ஆர்கானிக் பொருள் என்று பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பதாஞ்சலி நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிலும் அடி எடுத்து வைக்கும் விதமாக பி.எஸ்.என்.எல் நிறுவன உதவியுடன் சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிம் கார்டில் ரூ.144 செலுத்தி அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடிஅம்சங்களை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது பதாஞ்சலி முன்னெடுத்துள்ள நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் தற்போது வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்