சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளாதீர் விரல்களை காட்டி செல்பி எடுப்பது ஆபத்து : ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா எச்சரிக்கை

பெங்களூரு: விரல்களை காட்டி செல்பி எடுப்பது ஆபத்து என்றும், சைபர் குற்றவாளிகள் உங்கள் தகவலை திருடி விடுவார்கள் எனவும் பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். விரல்களை காட்டி செல்பி எடுப்பதில் ஆபத்து இருப்பதாக பகீர் தகவலை ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார். விரல்களை கேமராவுக்கு காண்பித்தவாறு செல்பி எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவு செய்கின்றோம். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அந்த புகைப்படத்தை ஜூம் செய்து கைவிரல் ரேகைகளை எடுத்து அவர்களின் தகவல்களை திருடிக்கொள்கின்றனர்.
இதன் மூலம் பல்வேறு குற்றச்செயல்களுக்கு கைரேகையை பயன்படுத்திக்கொள்கின்றனர். இது போல கை விரல் ரேகைகள் இருந்தால் குற்றவாளிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் குற்றங்கள் செய்வது அல்வா சாப்பிடுவது போல. எனவே செல்பி எடுக்கும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவி–்க்கின்றனர். விரைவில் இந்த தொழில்நுட்பம் பிரபலமாகிவிடும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே செல்பி எடுக்கும்போதும், அதை பேஸ்புக்கில் பதிவிடும்போதும் இரண்டு விரல்களை காட்டி போஸ் கொடுத்தல், வெற்றிக்கான சைகையாக கட்டை விரலை காட்டுதல், நடுவிரலையும் ஆள்காட்டி விரலையும் ‘வி’ போல காட்டுதல் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெங்களூரு மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
புதியது பழையவை