திருநெல்வேலி மாநகர ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., அவர்களின் உத்திரவுப்படி, திருநெல்வேலி மாநகர  ஊர்காவல் படைக்கு, புதிதாக ஊர்காவல் படையினர் (HOME GUARDS)  தேர்வு செய்யப்பட உள்ளனர்.  
திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 25-02-2024 ஆம் தேதி, (ஞாயிறு கிழமை) காலை 09.00 மணி முதல் காலை 12.00 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் கலந்து கொள்பவர்களிலிருந்து ஆண்கள் 60 நபர்கள் மற்றும் பெண்கள் 08 நபர்கள் என மொத்தம் 68 நபர்கள் செய்யப்பட உள்ளனர்.  இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 25-02-2024 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகுதிகள்:
1) 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2) 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
3) திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்.
1) கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ( இரண்டு )
2) கல்வி தகுதிச் சான்று. (அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல் ஒன்று)
3) ஆதார் அட்டை. (அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல் ஒன்று )
4) குடும்ப அட்டை (அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகல் ஒன்று)

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை