பான்கார்டு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது ?

மத்திய அரசு பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. குறிப்பாக வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை இணைக்கத் தவறினால் வரும் ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயலற்றதாகி விடும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக பான் கார்டு அரசாங்க சலுகைகளைப் பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுகிறது. குறிப்பாக இப்போது இந்தியாவில் ஆதார் அட்டையைப் போன்று இந்த PAN அட்டையும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கத் தவறினால் பான் கார்டு செயலிழக்க நேரிடும். அதன்பின்பு நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பல பான் கார்டுகளை வைத்துக் கொண்டு சிலர் ஏமாற்றுவதாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து தான் பான் கார்டு ஆதார் எண்ணை இணைக்கும் விஷயத்தைக் கையில் எடுத்தது மத்திய அரசு.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது உங்களுடைய பான் எண்ணுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. இப்போது அந்த வழிமுறைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


வழிமுறை-1

முதலில் www.incometax.gov.in என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அடுத்து Link aadhaar status என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு உங்களுடைய ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு View Link ஆதார் Status என்பதை கொடுக்க வேண்டும்.

வழிமுறை-2

குறிப்பாக உங்களுடைய ஆதார்-பான் இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்து பதில் காண்பிக்கப்படும். அதேபோல் ஆதார்-பான் இணைக்கப்படவில்லை என்றால் அதுகுறித்தும் நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இணைக்கப்படவில்லை என்றால் www.incometax.gov.in என்ற இணையதளத்தில் Link aadhaar கொடுத்து மார்ச் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

குறிப்பாக பான் கார்டு ஆதார் எண் இணைப்பு சாத்தியமானால் மட்டுமே ஒருவரின் வருமானத்தை அரசால் கண்டுபிடிக்க முடியும். அத்துடன் அதற்கான வரியையும் விதிக்க முடியும். அதேபோல் பான் கார்டு ஆதார் எண்ணை இணைத்தால் யாரும் வருமான வரித்துறையில் ஏமாற்ற முடியாது. பணம் எப்படி வந்தது? அது எப்படி வெளியேறியது என்பதை எளிமையாகக் கண்டுபிடிக்க முடியும். இதற்குத்தான் அரசு இந்த முயற்சியைச் செய்தது.

அதேபோல் நமது நாட்டு சட்டத்தின் படி ஒரு நபர் ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து இருந்தால் அவர் அபராதம் செலுத்த நேரிடும். பின்பு அவருடைய பான் கார்டு கேன்சல் செய்வது மட்டுமல்லாமல் அவருக்கு இந்திய வருமான வரி துறையால் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனே ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் விருப்பத்துடன் இதைச் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டீர்கள். தற்போது இதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விருப்பங்கள் உள்ளன.

மிக விரைவில் புதிய பதிவுகளுடன் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் தெரிந்து கொள்வோம், தகவல்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஊராட்சி சட்டதிட்டங்கள் , வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள் என பல பதிவுகளுடன் மிக விரைவில் 

எங்களுடன் இணைந்து இருங்கள்

Facebook | Twitter | Play Store 

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 

Download Now 

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை