விரைவில் தொடங்கும் 5 ஜி சேவை! பிரபல நிறுவனம் அறிவிப்பு.!

இந்தியாவில் தற்போது அனைத்து தரப்பு மக்களிடமும் இடம்பெற்றுள்ள ஒன்று எது என்றால்., அது விலைஉயர்ந்த அலைபேசியும் அதற்கான இணையதள சேவை தான். மக்களின் தேவை அதிகரிக்க, நேரத்தின் கால அவகாசத்தை குறைக்க இந்த இந்த இணையதள சேவைகள் அந்தந்த நிறுவனத்தின் முதலீட்டுக்கு ஏற்றார் போலவே 2 ஜி, 3 ஜி, 4 ஜி என்று வழங்கி வருகிறது.
எண்கள் அதிகரித்தால் மதிப்பு அதிகம் எனபதை போல 2 ஜியை விட 3 ஜியின் கட்டணத் தொகையும், 3 ஜியை விட 4 ஜியின் கட்டணத் தொகையும் அதிகம். தற்போது 4 ஜியில் இருந்து வளர்ச்சி பெரும் வகையில் 5 ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த 5 ஜி சேவையானது முதலில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முதலிலேயே அறிவித்தது. அதன் படி முதல்கட்ட பணியாக ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செய்தியை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவரும், நிர்வாகத்தின் இயக்குனருமான ஸ்ரீவஸ்தவா அறிவித்தார். இந்த 5 ஜி சேவையை 2020 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை