Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?

13 செப்., 2018
விநாயக சதுர்த்தி இதோ செப்.13 வியாழக்கிழமை வந்தாச்சு… நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
13/09/2018 அன்று வரும் விநாயக சதுர்த்தி நாளில் ஸ்ரீவிநாயகருக்கு செய்யும் லகு பூஜை (அதாவது எளிய கணபதி பூஜை)
பூஜைக்கு வேண்டிய பொருள்கள்:
1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப் பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4. சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- அர்க்கியம் விட கொஞ்சம் பால்
நைவேத்திய பிரசாதங்கள்
1.அன்னம் (மஹா நைவேத்தியம்)
2- அப்பம்
3- வடை (உளுந்து வடை)
4-கொழுக்கட்டை
5-வெல்ல பாயசம்
பழ வகைகள்
1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும்..
பூஜை முறை:
முதலில் மஞ்சளை தூய நீர் விட்டு, கலந்து பிடித்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை செய்யவும்.
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்று முறை உத்தரிணியில் தீர்த்தம் எடுத்து உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ள வேண்டும். இதற்குப் பெயர் ஆசமனம் என்பது.
பிறகு கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையார் முன் சேர்க்கவும்.
விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும்.
மணி அடிக்கவும். பின் மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி – ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமிஎன்று சொல்லி, புஷ்பத்தை பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி|(உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம்)
” உபவீதம் சமர்ப்பயாமி| ( அக்ஷதை போடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா||
– என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.
அடுத்து, ஸ்ரீ மகா கணபதிக்கான முக்கியமான பிரதான பூஜை
முதலில் செய்தது போல் ஆசமனம், சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே…
என்று சொல்லி ஒரு ப்ராணாயாமம் செய்யவேண்டும்.
அடுத்து, சங்கல்பம்… மமோ பாத்த… என்று தொடங்கும் சங்கல்பம்
சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்ஹோ தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, விளம்பிநாம ஸம்வத்ஸரே, தெக்ஷ்ணாயனே வர்ஷ ருதௌ, சிம்ம மாஸே, சுக்லபக்ஷே, சதுர்த்யாம், சுபதிதௌ, வாஸரஹ வாஸரஸ்தௌ, குரு வாஸரயுக்தாயாம், சுவாதி நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ,வர்த்த மாணாயாம் சதுர்த்யாம் சுபதிதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸெளமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஶ்ரீவிக்னேஸ்வர ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூப ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ விக்னேஸவர பூஜாம் கரிஷ்யே|
என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும்.
உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக் கொண்டு,
ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.
பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.
கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||
என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.
அஸ்ய ஶ்ரீ விக்னேஷ்வர ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்மரூவிஷ்ணு ரூமஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்ரூபீஜம், ஹ்ரீம்ரூசக்தி:, க்ரோம்ரூகீலகம்||
பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, மண் பிள்ளையார் பிம்பத்தில் சேர்க்கவும்.
ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
விக்னேஷ்வர யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
– இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வினாயகர் பூஜையைத் தொடங்கவும்.
1.ஷோடஸ உபசாரங்கள் செய்யவும். (16 வகை உபசாரங்கள்)
2.பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், பிள்ளையார் பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து,
ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.
3. ஏகவிம்ஸதி ( 21 முறை) தூர்வாயுக்ம.. அதாவது அருகம்புல்லால் பூஜை செய்யவும்.
4.பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி புஷ்பம் அர்ச்சனை செய்யவும். விநாயகர் அஷ்டோத்திரம் கொண்டு பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனை செய்த பின், சித்தி வினாயக அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம் என்று சொல்லி..
5. பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், கற்பூர தீபாரதனை, செய்யவும்.
6..பிறகு மந்திர புஷ்பம், பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்து, பிரார்த்தனை செய்யவும்.
7. பாலில் ஜலம் கலந்து கொண்டு அர்க்யம் விடவும்.
8. மறுநாள் புனர்பூஜை செய்து பிள்ளையாரை கிணற்றில்/குளத்தில் சேர்க்கவும்.
அனைவருக்கும் விநாயகர் நல்லருள் புரியட்டும்! ஜெய் விக்னேஸ்வரா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்