‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி - ஏர்டெல் புகார்

தொலைபேசி அழைப்பின் போது வரும் ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஜியோ நிறுவனம் 20 நொடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபடுவதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள ஏர்டெல், இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சாரசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருக்கும் போது ஜியோ வெறும் 20 நொடிகள் ரிங் நேரத்தை நடைமுறையில் வைத்துள்ளது.
 இதனால் அழைப்பை ஏற்கும் முன்னரே வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் பெறுகின்றனர். இது செயற்கையாக அவுட்கோயிங் அழைப்புகள், இன்கம்மிங் அழைப்பாக மாற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
உதாரணமாக ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளருக்குக் அழைப்பு விடுத்தால் அது அவருக்கு 20 நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்தக் குறைவான நேரத்தில் 30 சதவீதம் பேருக்கு மிஸ்டுகால் பெறுவார்கள். இப்போது மிஸ்டுகால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர் ஏர்டெல் வாடிக்கையாளருக்குக் கால் செய்வார்.
 இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு அவுட்கோயிங் அழைப்பு தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.
விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறுவனம் எதிர் நிறுவனத்திற்கு IUC கட்டணமாக 6 பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30 சதவீத மிஸ்டு கால்களின் மூலம் செய்யப்படும் அழைப்புளால் 6 பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது. இதன் வாயிலாக ஜியோ தற்போது மொத்தம் 65 சதவீத டெலிகாம் டிராபிக்-ஐ தன் வசம் வைத்துள்ளது என ஏர்டெல் குற்றம் சாட்டுகிறது
ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜியோ மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஜியோ கூறுகையில், 30 நொடிகள் தான் இந்தியாவில் கடைப்பிடிக்கும் ஒன்று. உலகளவில் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் 15-20 நொடிகளுக்குத் தான் ரிங் நேரத்தை வைக்கின்றன. ஜியோ தளத்தில் வரும் அழைப்புகளில் 25-30 சதவீத அழைப்புகள் மிஸ்டுகால்கள்தான் என தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

புதியது பழையவை