வாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு தகுந்தபடி பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளத என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் போலி செய்திகள் பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.


மேலும் இந்த வாட்ஸ்ஆப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை
கண்காணிக்க இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவுகிறது.

மூன்று புளூ டிக்
மேலும் வேகமாக பரவும் குறுந்தவல்களின் பயனர் அனுப்பும் குறுந்தவல்களுக்கு மூன்று புளூ டிக் வரும் பட்சத்தில் அதகை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் எனக் கூறப்பட்டது. பின்பு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனுடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.

பி.பி.சி செய்தி
ஆய்வில் வைரலாகும் குறுந்தகவல் முற்றிலும் போலி என தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற குறுந்தகவல்கள் ஏற்கனவே பகிரப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளில் பி.பி.சி செய்தி நிறுவனத்தின் செய்தி இருப்பது போன்றும் படமும் சேர்க்கப்பட்டு இருப்பதால் இதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

துளியும் உண்மையில்லை
ஆனால் வாட்ஸ்ஆப் செயலியில் புதிய டிக் பற்றி விவரங்கள் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் எதுவும் அப்டேட் செய்யப்படவில்லை. வலைதளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே
இடம்பெற்றிருக்கின்றன. எனவே அந்த வைரல் குறுந்தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள்
குறிப்பாக போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சில சமயமங்களில் போலி செய்திகளால் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.