வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாக அதன் பயன்பாட்டுச் சேவையில் பல புதிய மாற்றங்களையும் பல புதிய கூலான சேவைகளையும் அறிமுகம் செய்து வருகிறது.
வாட்ஸ்அப் தனது 1.5 மில்லியன் உலக பயன்பாட்டாளர்களின் சேவைக்காக, தற்பொழுது இன்னும் சில புதிய அம்சங்களைச் சோதனை செய்து வருகிறது.
பீட்டா 2.19.90 அப்டேட் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய போகும் இந்த புதிய சேவைகள் தற்போது பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்து வரவிருக்கும் 2.19.90 என்ற பீட்டா அப்டேட்டில் வாட்ஸ் அப் தனது மீமொஜி ஸ்டிக்கர்ஸ் பயன்பாட்டுச் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது என்று WABetaInfo தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
iOS பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய பீட்டா சேவை வழக்கம்போல் முதலில் iOS பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவையின் படி வாட்ஸ்அப் பயனர்கள் தங்களின் ஐபோன் வாட்ஸஅப் சாட்டிங்கில் இனிமேல் மீமொஜி ஸ்டிக்கர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எப்போது வெளியிடப்படும்? தற்போது சோதனையில் உள்ள இந்த புதிய சேவை வெற்றிகரமாக நிறைவடைந்ததும், மக்களின் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என்று வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. இந்த சேவையில் உள்ள பக்-களை (BUG) நீக்கிய பின்னரே அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
தாமதமாகும் பிங்கர்-பிரிண்ட் செக்யூரிட்டி சேவை காரணம் என்ன? வாட்ஸ்அப் தனது டச் ஐடி சேவையைப் பிப்ரவரி மாதமே iOS பயனர்களுக்கு வழங்கிவிட்டது. ஆனால் இன்னும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி சேவையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் அண்மையில் அதன் பிட்டா வெர்ஷன் சோதனையில் இந்த சேவையைச் சோதனை செய்துவருவதனால் கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டகாசமான பூமராங் சேவை இந்த சேவைகள் மட்டுமின்றி, வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு இன்ஸ்டாகிராமில் உள்ள பூமராங் சேவையையும், வாட்ஸ்அப் தளத்தில் வழங்கவுள்ளது. இந்த சேவையும் முதலில் iOS பயனர்களுக்கு வழங்கியபின் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில கூலான அடுத்த அப்டேட் பட்டியல் இதேபோல் இன்னும் சில கூலான சேவைகளையும் வாட்ஸ்அப் தனது பட்டியலில் வைத்துள்ளது, வாட்ஸ்அப் டார்க் மோடு, யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் ஃபிரம் பேஸ்புக் (WhatsApp from Facebook)என்ற டேக் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.