இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க!

தமிழகம் முழுவதும் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிற இண்டேன் காஸ் சிலிண்டர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. காஸ் விநியோகம் செய்யப்படும் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது குறித்து விரிவான, தெளிவான அறிக்கை ஒன்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சிலிண்டர், கேஸ் இவற்றின் தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செய்யப்பட்ட பின்பே, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முகவர்களால் வழங்கப்படும் ரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சிலிண்டரைப் பெற்றுக் கொண்டது ரசீதில் உறுதி செய்யப்பட வேண்டும். சில்லறை விற்பனை விலை என்பது, வாடிக்கையாளரின் சமையல் அறை வரை சிலிண்டரை டெலிவரி செய்வதற்கான தொகையும் சேர்த்து தான் ரசீதில் குறிப்பிடப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவரிடம் மேற்கொண்டு தொகை எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 'டிப்ஸ்' வழங்குவதை வண்மையாக கண்டிக்கிறது. ரசீதில் உள்ள சில்லறை விலைக்கு மேல், நுகர்வோர்களிடம் அதிகமான தொகை கேட்கப்பட்டால், வாடிக்கையாளர் 0422-2247396 என்ற எண்ணில் இண்டேன் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். காலை 9.30 முதல் மாலை 5.15 வரை செய்யப்படுகிற புகார்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், விபத்து மற்றும் கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண் மற்றும் இதர புகார்களுக்கு 18002333555 என்ற டோல் ஃப்ரீ எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.