மெசன்ஜர் செயலியில் அருமையான அம்சங்களை கொண்டுவந்த பேஸ்புக்.!

 


பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதன்படி தற்போது பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி உள்ளது.குறிப்பாக குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர் பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது. குறிப்பாக வீடியோகால் கால் பேசும்போது இதுபோன்ற அம்சங்கள்அருமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



அதேபோல் மெசன்ஜர் செயலியை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் சேவையிலும் இந்த புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக குரூப் எபெக்ட்ஸ் அம்சத்தில் 70-க்கும் அதிக எபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இவை மல்டி பிளேயர் கேமிங் அனுபவத்தையும் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் வீடியோ கால் மேற்கொள்ளும் போது குரூப் எபெக்ட்ஸ் அம்சங்கள் அனைவருக்கும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால்மெசன்ஜர் செயலி தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது.

குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. ஒருவேளை இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள மெசன்ஜர் செயலியில் வீடியோ கால் அல்லது ரூம் ஸ்டார்ட் செய்து எபெக்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மைலி முகத்தை கிளிக் செய்ய வேண்டும். இந்த பகுதியில் தான் குரூப் எபெக்ட்ஸ் ஆப்ஷன் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில நாட்களுக்கு பேஸ்புக்கின் பெயர் மாற்றப்படவுள்ளதாக தி வேர்ஜ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல் பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் ஜூக்கர்பெர்க் பெயர் மாற்றுவது குறித்த முடிவை ஆண்டு தொடர்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த மாநாடு வரும் அக்டோபர் 28-ம் தேதி நடைபெற உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இதுபற்றி ஊகங்கள்,வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம்,வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றை ஒருங்கிணைத்து ஒரே தளத்தில் அணுகும்முயற்சியில் பேஸ்புக் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

அதேபோல் மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகை படைப்பதில் பேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்துவருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் HOOTE என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த இருப்பதாக குறிப்பிட்டார். HOOTE என்ற செயலி மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளை விஷயங்களை இனி அவர்களது குரல்கள் மூலமாகவே எந்த மொழியிலும் இந்த HOOTE ஆப் மூலமாக பதிவிடலாம். குறிப்பாக இது பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றிக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Share on Google Plus

About உதயம் மலர்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 கருத்துகள்:

icessbacci சொன்னது…

Casino » Review - €300 Welcome Bonus | Online Casino
With a superb collection 온라인 카지노 대한민국 of slot machines, you can play 바카라 사이트 a host 메리트카지노 of your favourite 제왕 카지노 보증 casino games, including many bet365 titles from the classic favourites such as

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்