Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்!

6 நவ., 2021

 

Credit : Mudra.org

சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் விவசாயம் அல்லாத சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதனை பெறுவது எப்படி? தேவைப்படும் அவணங்கள் என்ன என்பதை பற்று பார்போம்.

பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Loan)

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கடந்த 2015 ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம், இந்த திட்டமானது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த முத்ரா கடன் திட்டம் 3 வகைகளில் வழங்கப்படுகிறது.

  • சிசு (SHISHU) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை ஒருவர் கடன் பெறலாம்.

  • கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெற முடியும்.

  • தருண் (TARUN) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக ஒருவர் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கடன் வசதி பெற முடியும்.

உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் நிரூபிக்கும் பட்சத்தில் கடன் கொடுப்பது தொடர்பாக வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார். இந்த திட்டத்தில் சொந்த செலவு, வீட்டு செலவு, கல்யாண செலவு போன்றவற்றிக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்காது. 

யாரெல்லாம் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்?

இந்த திட்டமானது, சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் எந்தவொரு இந்திய குடிமகனும் PMMY திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். உங்கள் தற்போதைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினாலும், அதற்கு பணம் தேவைப்பட்டாலும் , நீங்கள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கடன் பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் இதில் அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

சரக்கு வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்பாட்டுக்கு, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் கடையை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் சிறு, குறு நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

முத்ரா கடன் பெறுவது எப்படி?

இந்த திட்டத்தின் மூலம் கடன்பெற நீங்கள் அருகில் உள்ள வங்கிக்கிளையில் சென்று விண்ணப்ப படிவம் பெறலாம். அல்லது https://www.mudra.org.in/Home/PMMYBankersKit இந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் விண்ணப்பத்தை (Application Form) பதிவிறக்கம் செய்யலாம்

தேவைப்படும் ஆவணங்கள்

  • இருப்பிட சான்று

  • அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

  • இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது

  • சப்லேயர் விபரங்கள்.

  • தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் லைசென்ஸ்

  • ஆதார் - Aadhaar

  • பாண் எண் - PAN Card


முக்கிய அம்சங்கள்

கடன் பெற 18 வயது முடிந்திருக்க வேண்டும். இந்த வகை கடனுக்கு 12% வரை வட்டி (Interest) நிர்ணயிக்கபடும். நீங்கள் கடனை சரியாக திரும்ப செலுத்தும் பட்சத்தில், தொழில் மேம்பாட்டுக்கு வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்கும்.

இந்த முத்ரா கடன் பெற எந்தவித சொத்து பிணையம் மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை. கடன் பத்து லட்சம் வரை பெறலாம். ஒரு வங்கி கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தில் (MUDRA Loan scheme) கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது. முத்ரா கடன் அட்டை முத்ரா கடன் கிடைத்த உடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை (MUDRA Card) வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு (Credit Card) போல பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு www.mudra.org.in என்ற இனையதளத்தில் பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்