Recent Posts

Labels

உதயம் மலர்

உதயம் மலர்

Contact form

Search This Blog

3/related/default
Developed by ❤️ - Blogger Templates at Piki Templates | Distributed by Free Blogger Templates

Made with Love by

Monster Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which is designed in User friendly to handle by Piki Developers. Simple and elegant themes for making it more comfortable

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

6 நவ., 2021


இஎஸ்ஐ (ESIC) திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொழிலாளர்கள், வேலையில்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. இதனை எப்படி பெறுவது என்பது குறித்து பார்கலாம்.

அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா -(ABVKY)

அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா என்பது அரசு ஈட்டுறுதி கழகத்தால் இஎஸ்ஐ (ESIC)செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன் மூலம் இஎஸ்ஐ-ல் காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது அவர்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2018ஆம் முதல் இந்த திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் பலரும் தங்களில் வேலையை இழந்துள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC) சார்பாக சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

50 சதவீத சம்பளம்

  • வேலையை இழந்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய தொகை, விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்படும்

  • கொரோனா பாதிப்பால் வேலையை இழந்தவர்களுக்கும் வேலையை இழப்பவர்களுக்கும் 50 சதவீத சம்பளம் கிடைக்கும்.

  • இத்திட்டம் 2021 ஜூன் மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும்

  • இந்தத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விதிமுறைகள்

  • நிவாரணம் கோரும் காலத்தில் அவர்கள் வேலையிழந்தவராக இருக்க வேண்டும்.

  • ஊழியர்களின் தினசரி ஊதியத்தில் 25 சதவீத தொகையை ESI பங்களிப்பிலிருந்து பெற முடியும். இது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 90 நாட்களுக்கான பங்களிப்பை பெற முடியும்.

  • காப்பீடு கோரும் வகையிலான பணியில் அவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. இந்தகால கட்டத்தில் அவர்களது பங்களிப்பு குறைந்தபட்சம் 78 நாட்களுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

  • இதில் அக்டோபர் 1, 2019 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் உறுப்பினர்பங்களிப்பு செலுத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.

  • காப்பீடு செய்யப்பட்ட நபர் கடைசி ESIC கிளை அலுவலகத்தில் நேரடியாக கோரிக்கையை சமர்ப்பிக்லாம், இதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இத்திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்

    முதலில் அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனாவின் https://www.esic.nic.in/. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தை ஓப்பன் செய்ய வேண்டும்.

  • அந்த பக்கத்தில் Atal Bimit Vyakti Kalyan Yojana’ என்ற வசதியை கிளிக் செய்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

  • பதிவிறக்கம் செய்த படிவத்தை முழுவதும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு அதைத் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் அருகிலுள்ள கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்ப படிவத்தை நேரடியாக பதிவிறக்கம் செய்ய - இங்கே கிளிக் செய்க

Click here for Direct Link to Apply 

இந்தப் படிவத்துடன், non-judicial stamp paper, ஏபி -1 முதல் ஏபி -4 வரையிலான படிவங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு நீங்கள் ESIC (www.esic.nic.in) இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்